புதன், 4 ஆகஸ்ட், 2010

முத்துக்குமார் பிறந்தமண் அடங்கிப்போகாது.

"வன்னி "
ஒருபோதும்
இவ்வளவு துயரை சுமந்ததில்லை
எல்லையில்லாத் துயர்.-இன்று
அடிமைகளின் ஆன்மா தவிக்கும்
சுடலைப் பூமி.  அம்மா---------Share/Save/Bookmark

சனி, 5 ஜூன், 2010

தமிழ் திரையுலகிற்கு நன்றி.

பூவரசம்/கிழுவை
இலை கிடைத்திருந்தாலும்
அமிர்தமாய் இருந்திருக்கும்
பச்சை எதுவும் இல்லை
நல்ல காலம்
ஆடு மாடுகளும் இல்லாதது.
அன்று
எங்களது வாழ்வு அப்படி இருந்தது.Share/Save/Bookmark

சனி, 29 மே, 2010

எழுதா விதிக்கு அழுதா தீருமோ ?

குற்றமறியா திசநாயகத்திட்கு
நீதிமன்று இருபது வருடசிறை
மகிந்தவால் ஒரே நாளில்
கருணை விடுதலை
நீதியின் விலை என்ன?Share/Save/Bookmark

செவ்வாய், 4 மே, 2010

சுதந்திரம் மீள வருமா?

பூர்வீக மண்ணில
சொந்த உழைப்பில
கட்டின வீட்டில
மீள் குடியேற்றமாம்.Share/Save/Bookmark

திங்கள், 26 ஏப்ரல், 2010

காதல் -சிறு குறிப்பு

பூவைப் போல
காதல் இல்லை
பூ உதிர்ந்து விடும்
வேரைப்போல
காதல் வேண்டும் .
மழைக்காலத்தில் வரும்
சூரிய ஒளியைப்போல
காதல் தேவைப்படுகிறது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
விலங்குகளுக்கும் தான்.Share/Save/Bookmark

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

அம்மா அது உனக்குப் போதும்

தாயை திருப்பி
அனுப்பியது இந்தியா.
படுக்கை,
பக்கவாத நோயாளிக்கு
வர விசா வழங்கி
வந்த பின்
திருப்பியது இந்தியா
வெந்தது ஈவு,இரக்கம்.Share/Save/Bookmark

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

காற்றினில் செல்லும் புலம்பல்

அப்பா அம்மா
மனைவி பிள்ளைகள்
வீடு சமூகம் இனம் என்ற
கட்டுக்கோப்புகள்
மணல்வீடு ஆகிடுமா?

வனம் கூட அழியாமல்
காவல் காத்த தெய்வங்கள்
எங்கே?
நாடு,மக்கள் என்று
துளியும் சுயநலமற்ற
மாவீரர் அவர்
சுவடுகள் எங்கே?

ஆசையாய்,அன்பாய்,
ஒரு கூடாய்
வாழ்ந்த வாழ்விழந்து
அனாதையாய்
அந்நிய தெருக்களில்
அந்தரிக்கிறது
அற்ப மனசு.
இயங்க மறுக்கிறது
தேய்ந்த உடல்.
தெருநாய்களை விட
மோசமாய்ப் போயிற்று
குஷ்டரோக வாழ்வு.

நம்பிய இனத்தை
நட்டாற்றில் விட்டு
நரபலி போகிறது ஆத்மா.

ஒரு இனமாய்
ஒன்றுபடமுடியாமல்
ஒவ்வொரு கட்சியாகிறது இனம்.
மேய்ப்பன் அற்று
ஆடுகள் அங்கும் இங்குமாய்
அலைக்கழிகின்றன.

பச்சைப்பிள்ளை கூட
நித்தம்
தீ மிதிக்கிற வாழ்வு.
வாய்க்கரிசி போடும் அரசியல்.
அடிவருடிகள்
குழம்பிய குட்டைக்குள்
மீன் பிடிக்கிறார்கள்.
மரணித்த மாரித்தவளையாய்
பிரண்டு கிடக்கிறது இனம்.

ஆற முடியாச் சோகம்
மீள இயலா இழப்பு
சிலுவை சுமக்கும் நினைவு
வாழ வேண்டிய பொறுப்பு.

மரணம் வாழ்வின் முடிவல்ல .

தர்மம் தோற்பது போல் வெல்லும்.

-சுருதி-

 


Share/Save/Bookmark

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

விடுதலையும் காதலைப் போல

இன அழிப்பு
அல்லது இனச்சுத்திகரிப்பு
இனக் கலப்பு
நிலப்பறிப்பு
ஈழத்தமிழரை
இல்லாதாக்கும்
சிங்களக் கனவு நனவாகுமா?
கோடரிக்காம்புகள்,
விலாங்கு மீன்களுக்கு
என்ன நடக்கும்?
வாழும் உரிமைதான் போகிறது
வாழ்ந்த அடையாளமுமா?Share/Save/Bookmark

சனி, 3 ஏப்ரல், 2010

ஓ நாளைமறுதினம் உயிர்த்த ஞாயிறு

 எங்கள் கண்ணீரில்
கை,கால்,முகம் எல்லாம்
கழுவுகிறார் சிங்களர்.

ஒன்றுமில்லாது
ஒதுங்கிக் கிடப்பவரை
வேடிக்கை பார்க்க
தெற்கில் இருந்து
தினம் வருகிறது
மக்கள் கூட்டம்.
காயத்திற்கு
மிளகாய்த்தூள் தடவுவது போல்.Share/Save/Bookmark

சனி, 27 மார்ச், 2010

காந்தியின் கண்ணீர்

நண்பா உன் சிலையையா
உடைக்கிறார்கள்?

நல்லூரில்
நல்கந்தன் முன்
நலிந்த இனத்தின்
நலன் வேண்டி
நீர் கூட அருந்தாமல்
ஈரேழு நாட்கள்
நீ  எரிந்து
ஒப்பற்ற தியாகமானாய்.

உன்னைக் கொன்று
காந்திதேசம்
காந்தியைக் கொன்றது.

உலக தமிழர் மனங்களில்
நீ வாழ
உன் சிலையை உடைத்தார்
மீண்டும் மஞ்சள் துண்டுக்காய்
கழுத்தறுத்து
தாயைக் கொன்றார்.

பல்கலைப் படிப்பை
மக்களுக்காய்
துறந்தவன் நீ -மீண்டும்
அவர்களுக்காய்
பல்கலை போனாய்
இறந்த உடலாய்.

பாரத பணிமனை
யாழில் திறப்பு
ஈழத்து காந்தியின்
சிலை தகர்ப்பு.

நீதியிலும் ராஜதந்திரமா?
வாழ்வு கூனிக் குறுகிப் போகுமா?

சொந்த மண்ணில்,
மக்களுக்காகவே வாழ்ந்து,
அணுஅணுவாய் இறந்த மண்ணில்
உன் சிலையைக் காப்பாற்ற முடியவில்லை.

மக்கள் புரட்சி வெடிக்கும்
பாரில் எம்தேசம் பிறக்கும்
கனவோடு நீ போனாய்.


Share/Save/Bookmark

செவ்வாய், 23 மார்ச், 2010

உண்மைக் கதை -04

சமாதானம்  எனப் பேசப்பட்ட காலம். வன்னியின் அழகு மேலும் மெருகேறியது. எங்களுக்கெல்லாம்  உலகின் அழகே வன்னிதான் போல இருந்தது.அது போராளிகளுக்கும் ஓரளவு  ஓய்வு  காலம். அவர்களுக்கும்  திருமணம் நடந்தது.இருவரும்  நீண்டகாலப் போராளிகள் . அவனது பெயர் ஈழம் .அவன் மணலாறு படையணியில் இருந்து சண்டையில் காயமடைந்துமுதிர்ந்த மருத்துவர் ஒருவரின்  சமயோசிதத்தால்  மயிரிழையில் உயிர் பிழைத்தவன்.பின் மருத்துவப் பிரிவில் மருத்துவப் 
போராளியாகி நீண்ட மருத்துவப் பணிசெய்தவன்.    Share/Save/Bookmark

சனி, 20 மார்ச், 2010

அரச பயங்கரவாதமும் சில பெறுபேறுகளும்.

பதினைந்து  வயதில் 
எழுதப்  பழகுகிறாள் 
எழுதிய கையில்லாததால்.

துரு துரு கண்களால் 
உற்று உற்றுப் பார்க்கிறாள் 
காதுகள் கேட்காததால்.  Share/Save/Bookmark

வெள்ளி, 19 மார்ச், 2010

பிரியசகி

பிரிவு 
கிழக்கு  மேற்காகிறது.
மனதுகள்  மட்டும் 
ஒருபுள்ளியாய்,
பூமியாய்  சுழல்கிறது.

மனதை  எழுதி, மடித்து 
கடிதமாய்  அனுப்ப 
முகவரிகள்  ஏது?


Share/Save/Bookmark

செவ்வாய், 16 மார்ச், 2010

தனியரசு

தமிழர் தாயகத்தை 
அந்நியர் வந்து, அநியாயம் செய்து,
இரு தேசத்தை ஒரு தேசமாய்,
ஒன்றை சிரச்சேதம் செய்தனர்.
தம் நலனுக்காய். 

தனித் தமிழ் தேசத்தை 
நடுக் கடலில் 
தத்தளிக்க விட்டுச் சென்றனர்.
தத்துப் பிள்ளையாக்கி.
தம் நிலத்தை,
தம் இனத்தை 
தாமே ஆளல் தவறா?
தனியரசு வேண்டாமாம்.
தரணி எங்கும்   தனியரசுகள் தான் 
தறி கெட்டுச் சொல்கின்றன. 


Share/Save/Bookmark

வியாழன், 11 மார்ச், 2010

உண்மைக் கதை 03

மாசி மாதம் 2009. வன்னி.
இராணுவம் சுதந்திரபுரத்தை ஆக்கிரமித்தது. சுதந்திரபுரம்வள்ளிபுனம் எங்கும் பிணக் குவியல்கள். வள்ளிபுனம் சிறுவர் பாடசாலையில் மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் அதிக சுமையை சுமந்து கொண்டிருந்தது. கொத்து கொத்தாய் காயங்கள் வந்தன. சிகிச்சையின்  வினைத்திறன் உச்சமாகவே இருந்தது. இடைக்கிடை மருத்துவமனை எல்லைக்குள்ளும் செல்வந்து விழுந்தது. சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் இயன்றவரை பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தனர். புதிதாக அனுமதிக்கப் படுகிறவர்கள் மண் முற்றத்தில் கிடத்தப் பட்டிருந்தனர். சத்திர கிச்சை கூடம் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.  


Share/Save/Bookmark

செவ்வாய், 9 மார்ச், 2010

கோடை விடுமுறை எனக்கும் அவனுக்கும்

எனது நாட்கள் அழகானவை,
வீட்டைவிட்டு நெடுந்தூரப் பயணம் - மகிழ்வுடன்
வெட்டை வெளியில் “tent” அடித்து – சுகமான
காற்றை அனுபவித்த இரவுகள்
நெருப்புமூட்டி வாட்டியயுவு உண்டு இரசித்த –அழகான
பகல்ப் பொழுதுகள்
அப்படிக் கழிந்த விடுமுறைக்காலம் இங்கே எனக்கு.

எப்படியிருக்கு எனது தம்பியின் விடுமுறை…??
அவனும்..
வீட்டைவிட்டு நெடுந்தூரம்தான் பயணிக்கின்றானம்- ஆனால்
துயரத்துடன்
வெட்டை வெளியில் ”tent” அடித்துத்தான் இருக்கின்றானாம் - ஆனால்
கந்தகநொடியை சுவாசித்துக் கொண்டு
வாட்டிய உணவையாவதும் உண்ணலாமாம் - ஆனால்
வாட்டத்தான் உணவில்லையாம்
இப்படிக் கழிகின்றது விடுமுறைக்காலம் அங்கே அவனுக்கு!
அவனது நாட்கள் துன்பமானவை!!

-கதிரவன்-


Share/Save/Bookmark

ஞாயிறு, 7 மார்ச், 2010

புத்தாண்டு எனக்கும் அவளுக்கும்

அவள் எடுத்தாளே அழைப்பு என்பதே விதி

இன்றும் அப்படித்தான் அவளே எடுத்தாள்


"எப்படியண்ணா புத்தாண்டு?"

நான் கேட்கத் தயங்கியதை

அவளே கேட்டுவிட்டாள்.

இண்டைக்கு ஒருநாள் ஒரே வெடிச்சத்தங்கள் தான்

அண்ணார்ந்து பார்க்கவே அழகாய் உள்ளது வானம் என்றேன் நான்

ஒவ்வொரு நாளும் வெடிச்சத்தங்கள்தான் எங்களுக்கு வாழ்க்கை.

அண்ணார்ந்து பார்க்கவே "மிக்",  வருவது போன்று பயமாக

இருக்கிறது அண்ணா என்றாள் அவள்.

கந்தகம்,

சிறுவர்களுக்கு அழகிய வானவேடிக்கை காட்டுவதற்காய் - இங்கே

என் தங்கைகளின் உயிர்களைப் பறிப்பதற்காய் புத்தனின் சீடர்கள்

 கையிலே - அங்கே!


"என்ன சாப்பாடு?" நான் கேட்டகத் தயங்கும் இன்னொரு கேள்வியையும்

அவளே கேட்டுவைத்தாள்

மைக்டொனால்ஸில் கம்பேர்க்கர் என்றேன் நான்.

காலையில் கஞ்சிதான்

அப்பா வந்தாத்தான் மதியம் தெரியும் என்றாள் அவள்.

ஏன் காசு எல்லாம் முடிஞசுபோச்சோ என்றேன் நான்.

காசு இருக்குக் கையில்இ ஆனால் கடையிலதான் சாமான்கள் இல்லை

என்றாள் அவள்.

பல புண்ணியங்கள் உலகிற்குச் சொல்லிச் சென்றான் புத்தன் அன்று,

ஆனால் இன்றோ அவன் சீடர்கள் தம் நாட்டிலே என் தங்கைகளைப்

பட்டினி போடுகிறார்கள்.அண்ணா மேலாலே வருகுது, பிறகு எடுக்கிறேன் என்ற நடுங்கிய

குரலுடன் துண்டிக்கப்பட்டது தொடர்பு.

ஓ புத்தனே! என் தங்கைக்கு அடுத்த புத்தாண்டாவது சந்தோஷமாய்

இருக்காதா?

ஐயோ வேண்டாம்! அடுத்த முறை அவள் குரலை நான் கேட்பதற்றகாயினும்

உயிரோடு விட்டுவைப்பார்களா அவளை உன் சீடர்கள்??

-கதிரவன்-
( போன வருட பிறப்பின் போது  எழுதப்பட்டது)


Share/Save/Bookmark

வெள்ளி, 5 மார்ச், 2010

மனதின் பாடல்

2010 பிறக்கிறது.
ஐரோப்பா
சில தசாப்தங்களுக்குப்  பின் 
அசாத்திய பனிமழை, அதிக குளிர்.
பால் போல வெள்ளை என்பவர் 
பனிமேடுகளைப்  பார்க்காதவர்.
நீலம் போட்டு வெளுத்த வெள்ளை.
மனதில் இல்லாக் குளிர்மையை 
இயற்கை தருகிறது போல. 
Share/Save/Bookmark

வியாழன், 4 மார்ச், 2010

உண்மைக் கதை - 02

2009, ஜனவரி மாதம் வன்னியின் மகிழ்வான காலங்கள் படிப்படியாக மூட்டை கட்டித் தூக்கிப் போகப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் சோகம் அப்பிய முகங்களும்இவ்வளவு காலமும் சேர்த்துழைத்த சொத்துக்களை  இடம்பெயர்வோடு எடுத்துச்செல்லும் முயற்சியும் தான்.ஸ்ரீலங்கா இராணுவம் உடையார்கட்டுக் குளத்திற்கு அருகில் வந்துவிட்டதாகச் செய்தி.செல்மழை உடையார்கட்டு சன நெருக்கடி மிக்க பகுதியை சதா
பதம் பார்த்த படி இருந்தது. Share/Save/Bookmark

புதன், 3 மார்ச், 2010

உண்மைக் கதை - 01

இது 2007
மன்னாரில்  விடுதலைப் புலிகளின்  கட்டுப்பாட்டுப்  பிரதேசமாக பெரியமடுதச்சனாமருதமடு, மடு, பண்டிவிரிச்சான், அடம்பன், ஆண்டான்குளம், பள்ளமடு, வெள்ளாங்குளம் வரை இருந்தது.சுமார் எழுபத்தையாயிரம் மக்கள் வாழ்ந்தனர். அப்பிரதேசத்தில் இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை உச்சமடையத் தொடங்கிற்று.அப்பிரதேச மருத்துவ மனையொன்றில் சத்திரசிகிச்சை கூடம் உருவாக்கப்பட்டது. அச்சத்திரசிகிச்சை கூடத்திற்கு பொறுப்பாக போராளி மருத்துவர் வாணன் நியமிக்கப்பட்டார். அவருக்கு தேவையான  புதிய மருத்துவப் போராளிகளும் இணைக்கப்பட்டனர்.
Share/Save/Bookmark

திங்கள், 1 மார்ச், 2010

-இதய நாட்டு.-
உலக அதிசயம் எது?
அன்பு தான்.
அன்பு உருவம் அற்றது .
அன்பு நூலளவாய் இருந்தாலும்
அதன் பலம் மலையையும் விஞ்சும்Share/Save/Bookmark

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சாட்சி அல்லது வாக்குமூலம்
-சுருதி-

2009 “விரோதி” வருடமாய்ப் பிறந்தது
கிளிநகர் வெறிச்சோடிப்போயிற்று
மீள் பிரசவத்தின் பின் பத்து வயதுதான்.
வயதின் அழகும், துள்ளலும் அகன்று
அலங்கோலமானது ஆசைநகர்
உழைப்பை, சொத்தை உறிஞ்சி எழுந்தநகர்.
எல்லாம் இழந்து ஏதிலியாய்க்கிடக்கிறது.
கடைகள், வீடுகள், கூரைகள் இழந்து.
ரைக்டர் ரைக்டராய், லொறி லொறியாய்
உயிர் மனிதர் ஊர் துறந்து,
மடு, அடம்பனில் தொடங்கிய பயணம்
வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையூம்
அள்ளிப்போவது போல்
ஏன் இந்த அவலம்
பிறந்த ஊரில், பூர்வீகம் வாழ்ந்த மண்ணில்
தம் உழைப்பில் மட்டும் வாழ்ந்தவருக்கு
ஏன் இந்த அவலம்
பச்சைப்பிஞ்சுகள், இயலாமுதியோர் என
இடம்பெயரும் இடர்
வாகனங்கள் பத்து அடி நகர
பத்துமணி எடுத்திற்று.
பரந்தன், முல்லைவீதி
வரலாற்றில் மனிதரால் நிரம்பிற்று.
மனித பிதுங்கலால்
அழகுமுகங்கள் கலை(ள) இழந்தன.
அந்த கோடி அழகான வாழ்வை இழந்து
உயிரைத் தூக்கிப்போயின உடல்கள்.
தர்மபுரம், வட்டக்கச்சி, விஸ்வமடு
நிரம்பியது மனிதரால்.
பூர்வீகமக்கள் வாழ்விடம் தந்தனர்.
ஊர் ஊரான இடப்பெயர்வின் வலியோடு
நகரின் இடப்பெயர்வூம்
வலியை எழுத வார்த்தைகள் போதாது.Share/Save/Bookmark