செவ்வாய், 20 செப்டம்பர், 2022

என்ன விட்டுவந்தேன் தாய்மண்ணே !

 புலம்பெயர்ந்தேன் 

யாவும் காவி புலம்பெயர்ந்தேன்

மனம் குடைகிறது 

ஏதோ ஒன்று விடுபட்டதாய்

எல்லாம் இருந்தும் 

ஒன்றும் இல்லாதவனாய் 

என்னதான் விட்டுவந்தேன் 

எனை வளர்த்த தாய்மண்ணே !  



Share/Save/Bookmark

திங்கள், 19 செப்டம்பர், 2022

விடுமுறைநாளில் பனிக்கால காலை

 அதிகாலை 

பனி கீழிறங்கிக்கொண்டிருந்தது 

வீட்டினுள் குளிர் புகுந்து தட்டியெழுப்பியது 

யன்னலருகில் நான் 

கலங்கி பறைந்தது சுற்றம் 

வெளிராய் உறைந்த வீதிகள்

விதி தப்பவைத்தது விடுமுறைநாள் 

கம்பளியையும் தாண்டி ஈரல் நடுங்கிற்று 

விறைத்து பார்த்துக்கொண்டிருந்தேன் 

மெதுமெதுவாய் வந்தான் ஆதவன் 

சாகசங்கள் புரிந்தான் 

வெள்ளம்புவிட்டு என்னையும் வீழ்த்தினான் 

என்னையறியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் 

குளிர் கால ஆதவன் 

ஆகா என்ன சுகம் 

நேரம் போக போக சுட்டெரித்தான் 

யன்னலை மூடுகிறேன்

காலையொன்று காணாமல் போகிறது 

          



Share/Save/Bookmark

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

 என் இனம் சக இனத்தால் 

நசுக்கப்படுவதை கேட்டு வளர்ந்தேன் 

சுதந்திர தீர்மானத்திற்கு தள்ளப்பட 

ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து 

விடுதலைக்கூட்டணியை ஆதரித்தேன் 

தேர்தலில் வென்றும் எதுவும் இல்லை 

அரசியல் ஜனநாயத்தில் நம்பிக்கையிழந்தேன் 

அமைச்சரே நூலகத்தை எரிக்க 

இனஅழிப்பை தடுக்க வேறுவழியில்லை 

சொந்த இலட்சியம் துறந்தேன் 

நண்பன் அகிம்சையில் பிரிய

அதிலும் நம்பிக்கை போயிற்று  

ஆயுதமே வழியென்றாயிற்று  

இனம் சுதந்திரம் பெறும் நேரம் 

உலகம் எங்களை அழித்திற்று

  



Share/Save/Bookmark
Bookmark and Share