ஞாயிறு, 22 ஜனவரி, 2012

ஆறாத,அழியாத மனவடுவும்,

ஆறாத,அழியாத மனவடுவும்,
தாளாத சோகமும்,
வீழாத பாசமுமாய் நீளும் 
தீராத தாகம் 


Share/Save/Bookmark

சனி, 7 ஜனவரி, 2012

மறக்கப்பட்ட சுமைதாங்கிகள்

இது 1995,1996 காலப்பகுதி வன்னி மண்ணின் சனத்தொகை திடீரென
நான்கு மடங்குகளால் அதிகரித்தது. தங்குமிடம்,நோய் ,உணவு என
பெரும் சவால்களை விடுதலைப்புலிகள் இராணுவ நெருக்குவாரத்துடன்
சேர்த்து எதிர் கொண்டனர்.மலேரியாவாலும்,செப்ற்றிசீமியாவாலும்
அதிக உயிர்கள் போயிற்று .சிறுவர்களுக்கும் தாய்மார்களுக்கும்
பெரிய அளவில் போசாக்கு குறைபாடு தோன்றிற்று. சிறுவர்
பட்டினிச்சாவு திட்டம் ஊடாக பலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
ஓரளவு முழுமையாக வெற்றிகொள்ளப்பட்டது.சிறிலங்கா அரசின்
பொருளாதார தடையை உடைக்க , மக்களின் சுகாதார நலன்களை
மேம்படுத்த,மாணவர்களின் கல்வியினை உயர்த்த மிகக்குறைந்த
ஆளணியினர் தொண்டர்களுடன் இணைந்து தொடர் இடப்பெயர்வுகளுடன் மிகப்பெரும்
பங்காற்றினார்.மக்கள் ஓரளவு நிமிர்ந்தனர்.சமாதானமும்
வந்தது.வன்னியை யாவரும் பிரமிப்புடன் பார்த்தனர்.
உழைத்தவர்களை, அந்த உழைப்பை விடுதலைப்புலிகள்
மாத்திரமே அறிவர்.விடுதலைப்புலிகளின் இராணுவ
வெற்றிகளுடன் இந்தவெற்றியும் கலந்திருந்தது.உழைத்தவர்களில்
பலர் இப்போது நம்மோடு இல்லை என்ற கவலையுடன்
அவர்களது உழைப்பும் நினைவுகூறப்படாதது காலத்தின்
கொடுமையாகிறது.

                                                         -சுருதி-


Share/Save/Bookmark

திங்கள், 2 ஜனவரி, 2012

பூகோளத்தின் எல்லை மட்டுமல்ல சோகத்தின் எல்லையும் பெரியது தான்.

வைகாசி இரண்டாயிரத்தி ஒன்பதுடன் புலிப்போராளிகளின்,அவர்,மாவீரர் குடும்பங்களின் வாழ்க்கையும் சிதறிப்போயிற்று.அவர்கள் பட்ட துயரின்
அளவு ஆராயமுடியாப் பெரியது . தம் இனத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும்
அவா ஒன்றுடனேயே பலர் தானாக புலிகள் அமைப்பில் இணைந்தனர்.
மனிதரில் இருக்கும் அழுக்கான சுயநலத்தை சுருக்கிட்டு இனச்சுமையை
சுமக்கப்போனவர் அவர். அவர்களில் பலர் இன்று மாவீரர் ஆகிவிட்டனர்.
பலர் இன்றும் வெளித்தெரியா சிறைகளில் அங்கங்கள் பிடுங்கப்பட்டு
சித்திரவதையில் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் .பலர் சிறைக்கூடங்களில்
விசாரணை அற்று வதங்கிக்கொண்டிருக்கிறார்கள்.புனர்வாழ்வு என்ற
பெயரில் கழுத்தில் சுருக்குக் கயிற்றுடன் விடப்பட்டிருக்கிறார்கள்.சிலர்
தப்பிப்பிழைத்து பிறநாடுகளில் அகதியாய் அலைகின்றனர்.சிலர் அபாய
கடற்பயணங்களில் மீன்களுக்கு இரையாகினர்.விடுதலைக்காய் உயிர்
தந்த மாவீரர்களின்,மக்களின் நினைவில் சிலர் முழு/அரை மனநோயில்
புழுங்கி வாழ்கின்றனர்.
                                          புலிப்போராளிகளின்,மாவீரர்களின் குடும்ப நிலையோ
மிகப்பரிதாபமானது.பொருளாதாரச் சுமை ஒருபுறமும்,அழகூட முடியாக்கொடுமை உடன் , கல்வி ஊடாக
சமூக கட்டமைப்பில் பின்தங்கியும் ,வாழ்வை வாழ்ந்து     முடிக்க
வேண்டிய கட்டாயத்தில் சிங்கள புலனாய்வுக்குள்  சிக்குப்பட்டுக்கிடக்கிறார்கள். எந்த உய்வும் இல்லை.பூகோளத்தின் எல்லை
மட்டுமல்ல சோகத்தின் எல்லையும் பெரியது தான்.
                                         புலிவேசம் போட்ட சிலர் சிங்களத்திற்கு துணை போய்
அற்ப சலுகைகளுக்காய் காட்டிக்கொடுப்பதும் மறுப்பதற்கில்லை.இவர்களில் சிலரும்,புலிகளில் ஒட்டி இருந்த சிலரும் ,புலிகளை ,
அவர் வரலாறுகளை கொச்சைப்படுத்தி பிச்சை எடுப்பதும் உண்மை.எது
எப்படி இருப்பினும் புலிகளின் ஈகத்தை,அவர் வீரத்தை தமிழராய் வாழ்பவர்
மனதிலிருந்து என்றும் அகற்றிவிடமுடியாது.
                                                                     
                                                                                                                     - சுருதி-      


Share/Save/Bookmark