ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் 7

 2006 ,2007 ,2008  ஆண்டுக்காலப்பகுதியில் வன்னிக்குள் சுமார் பத்தாயிரம் முதலுதவியாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். தமிழீழ சுகாதாரசேவைகளின் நெறிப்படுத்தலில் குறிப்பாக கஷ்டப்பிரதேசங்களில் இவ் முதலுதவியாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். தமிழீழ சுகாதாரசேவைகளின் தொற்றுநோய் தடுப்புப் பொறுப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் இந்நடவடிக்கையிற்கு பாரிய பங்காற்றியிருந்தார்.    தமிழீழ சுகாதாரசேவைகள் ,  திலீபன் மருத்துவசேவையினர் இவ்வகுப்புக்களை நடாத்தி முடித்து தமிழீழ சுகாதாரசேவைகளின் முதலுதவி சான்றிதழ்களையும் வழங்கியிருந்தனர். பல முதலுதவியாளர்களை போர்ச்சூழலில் இழந்துவிட்டோம். நிச்சயமாக போர்மருத்துவத்தில் இவர்களது பங்கும் இலைமறைகாயாய் இருந்திருக்கும். நான் வீட்டுக்கு ஒரு முதலுதவியாளரை  உருவாக்க நினைத்திருந்தேன் (சுமார் எண்பதாயிரம்). அதற்கு சூழல் இடம்தரவில்லை.   
    



Share/Save/Bookmark

வெள்ளி, 29 டிசம்பர், 2017

 அண்ணா !
 இந்த வருடமும்
"நாட்குறிப்பு" கிடைக்கவில்லை
ஒன்பது வருடங்களாய்
உங்கள் "கையெழுத்தை" தேடுகிறேன்
கவலைகளால் கழிகின்ற காலத்தை
குறித்துவைக்க "நாட்குறிப்பு" கிடைக்கவில்லை
உன்னத விடுதலைக்கு உயிர்தந்த வீரருக்காய்
உடன் கூடி சென்ற மக்களுக்காய்
எதுவும் செய்துவிட முடியவில்லை
இதயமதை முள்மீது சொருகிவிட்டு
மறதிநோய்  வாராதோ என ஏங்குகிறேன் 

"தலைவரின் தனிப்பட்ட மருத்துவராய் அன்று 
தனித்துப்போனேன் இன்று
தத்தளித்துவாழ்கிறேன் மனதைக்கொன்று"




Share/Save/Bookmark

புதன், 27 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் -6

  2009 இல் போர் முடிந்ததும் இலங்கை அரசு வன்னியில் திட்டமிட்டு செய்த படுகொலைகளை மறைக்கமுற்பட்டது. போர் தீவிரமான போது சர்வதேச அமைப்புகளை அப்பிரதேசத்தில் இருந்து முழுமையாக அகற்றியிருந்தது. போர்க்காலத்தில் உள்ளிருந்து சொல்லப்பட்ட தகவல்களையும் புலிகளின் நெருக்குதலால் சொல்கிறார்கள் என கதைவிட்டிருந்தது. போரில் மக்களுக்கு Zero  Casualty  என முழுப்பொய்யை சொன்னது. போரின்பின்பும் சர்வதேசத்தில் இருந்து மக்களை குறிப்பிட்டகாலம் பிரித்துவைத்து பொய்யை உலகிற்கு உண்மையாக்க முயன்றது. இழப்பின் சூடு ஆறமுதல் உலகிற்கு உண்மையை சொல்லும் நேரடி சாட்சிகளில் ஒருவனாய் இருந்தது மனதிற்கு ஆறுதல் தருகிறது.  உலகம் எங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை என்பது தெரிந்திருந்தாலும் இலங்கை இனப்படுகொலை செய்தது என்பது செய்தியாயிற்று.  2009 ,2010 ஆண்டுக்காலங்கள் எனக்கு அதிக மனப்பாதிப்பு காலமாய் இருந்தது.         



Share/Save/Bookmark

செவ்வாய், 26 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் - 5

 இன்னும் இரண்டு வருடங்களில் சுதேச மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவில் 2008 ஆம் ஆண்டளவில் இருந்தோம். கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் மூலிகைத்தோட்டத்தை சில மாதங்களில் கடின உழைப்பில் அமைத்து ஐநூறுக்கு மேற்பட்ட மூலிகையுடன் பொழிந்து நின்றது அந்த மூலிகைநிலம். சுகாதாரசேவைகளின் பணிப்பாளர் வாமன் அவர்களின் அயராத முயற்சி புது நம்பிக்கைகளை தந்தது. 2009   இல் சுகாதார விஞ்ஞான கல்விநிறுவனத்தில் சுதேச மருத்துவ Diploma  ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தேன். எமது "கப்டன் திலீபனா" சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட மருந்துகள் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தன.   2009   இல் உற்பத்தியை நவீனப்படுத்தும் யோசனைகளுடன் இருந்தோம். கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவைக்கூடாக வசதிகுறைந்த கிராமங்களுக்கும்  சுதேசமருத்துவத்தை வழங்கிவந்தோம்  .  "சுதேச ஒளி" என்ற காலாண்டு இதழையும் நடாத்திவந்தோம்.        



Share/Save/Bookmark

சனி, 23 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன்- 4


கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் சமாதானகாலத்தில் அதிநவீன மருத்துவமனை ஒன்று புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் விடுதலைப்புலிகளால் கட்ட திட்டமிடப்பட்டது.  அது சம்மந்தமான செய்தி மேலெழுந்தவாரியாக தெரிந்திருந்தது. எனது வேலைப்பளுக்களுக்கிடையில் அச்செய்தியை நான் பெரிதுபடுத்தியிருக்கவில்லை.  மருத்துவமனை சம்மந்தமான முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு முன்பு அரசியல்த்துறை பொறுப்பாளரால் நான் மருத்துவமனையின் Executive  Director   ஆக அறிவிக்கப்பட்டேன். தாயகம் மருத்துவமனை திட்டம் உலகத்தரத்திலானது. இயக்கம் மிகவும் தூரநோக்கோடு இருந்தது . "தாயக மருத்துவமனை"  என பெயரிடப்பட்ட அந்த மருத்துவமனையும் கானல் நீராகவே போய் விட்டது.      



Share/Save/Bookmark

செவ்வாய், 19 டிசம்பர், 2017

சுவாசிக்க நல்ல காற்று
அருந்த தூய நீர்
இயற்கையில் விளைந்த உணவு
தற்சுகாதாரம்
பாதுகாப்பான சமையல், பரிமாறல்
தாய்,சேய்,முதியோர் நலன்
சினம் அறியா, புறம் பேசா வாழ்வு
இனமத பேதமில்லை
அறமே வரம் "கரம் இணைவோம்" 




Share/Save/Bookmark

வியாழன், 14 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் 3

 2008 ஆம்  ஆண்டுப்பகுதியில்  உணவு, மருத்துவ பகுப்பாய்வு ஆய்வுகூடத்தை ஆரம்பிக்கும் பாரிய திட்டமிடல் எங்களால் மேற்கொள்ளப்பட்டது. அன்பு அதற்காக உழைத்திருந்தார் . ஆய்வுகூடத்திற்கான வரைபடத்தை கீறியிருந்தேன்  , நிலம் என்பன ஒதுக்கிடப்பட்டு கட்டிட வேலைகளை ஆரம்பிக்கும் நிலையில் அன்பு இருந்தார். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நாம் நகர இராணுவம் புகுந்தது எம் எல்லைக்குள்.    



Share/Save/Bookmark
Bookmark and Share