சனி, 18 ஜூன், 2016

ஒரு இனத்தின் தற்கொலை
Share/Save/Bookmark

புதன், 8 ஜூன், 2016

எறும்புகள் சுமந்தன மலையை

எனக்குள்ளே இரகசியங்கள்
இரையாகிப்போகட்டும்
என்னோடு வாழ்ந்து பிரிந்த
விடுதலைக்கதிர்களின் நினைவில்
எஞ்சிய காலம் கொதித்து முடியட்டும்
வழியற்ற பொழுதுகளில் உண்ட
பழுதாகிய உணவின் சுவைகூட
சொர்க்கத்தில் எனக்கில்லையே
மரத்த வாழ்வில்
குளிர்மை வாழ்விற்கு
ஒன்றாய் வாழ்ந்த தோழர் இல்லையே
மக்கள் தன் மானிட நேயம் உறைந்ததால்
எறும்புகள் சுமந்தன மலையை
சில இறந்தது போக - மிகுதி
திசைக்கொன்றாய் அழுந்துகின்றன பாரீர்
  Share/Save/Bookmark

உணர்விழந்த நீதி "யுத்தகளத்தை மீளத்திறக்குமா" ?

உலகம் திருப்தி அடைந்திருக்குமா?
சகல ஆயுதங்களையும் பரீட்சீர்த்தபின்
எதிர்பார்த்திருக்குமா?
மூன்று இலட்சம் பேர்  தப்புவார்கள் என்று
 விமானம்,கடல்,தரையென
தடை செய்த நச்சு,கொத்துக்குண்டுகளுடன்  மூச்சாய்த்தாக்கியும்
உணவு,மருந்துத்தடையோடும் 
மூன்று இலட்சம் பேர்  தப்புவார்கள் என்று


 கோத்தா கதைவிட்டார்   எண்பதாயிரம் பேர்தான் உள்ளனர்
அவர் நினைத்ததுபோல் ஏன் கொல்லமுடியவில்லை?
உலகால் கைவிடப்பட்டவர் எப்படி?
 பதுங்குகுழி அமைப்பு போதனை,தொற்றுநோய்த்தடுப்பு
மருத்துவ அணியின் பங்களிப்பு
புனர்வாழ்வுக்கழகத்தின் கஞ்சித்திட்டம்
புலிகளின் குரலின் ஒத்துழைப்பு மக்களின் உறுதி
வர இருந்த பெரும் இழப்புகளை குறைத்தன


இழந்தது ஒன்றல்ல,இரண்டல்ல,பல ஆயிரம்
கொலைகாரர்கள் இன்னும் வாழ்கிறார்கள்
உணர்விழந்த  நீதி  "யுத்தகளத்தை மீளத்திறக்குமா"  ?

நீறு பூத்த நெருப்பாய் கிடக்குமா?


Share/Save/Bookmark

செவ்வாய், 7 ஜூன், 2016

அவனுக்கு சுடப்போகுதடா!

இதயபூமி-01(மண்கிண்டிமலை இராணுவமுகாம் தாக்குதல்), எனது sub main உம் பால்ராஜின் கட்டளைப்பீடமும் ஒன்றாகவே அமைந்திருந்தது.வெற்றித்தாக்குதலின்பின் மூன்று இராணுவத்தினர் பிடிக்கப்பட்டு கை,கால் கட்டப்பட்ட நிலையில் எமது நிலைக்கு
விடப்பட்டிருந்தார்கள் . எனக்கு பிளேன்ரி (Plain tea)  தரும்போது இராணுவத்தினருக்கும் கொடுக்கச்சொன்னேன். என் உதவியாளன் ஒரு இராணுவனுக்கு  பிளேன்ரி பருக்கதொடங்க பால்ராஜ் கண்டுவிட்டார். டேய் அவனுக்கு சுடப்போகுதடா! என்று கத்தினார். உதவியாளன் "ஆற்றிப்போட்டுத்தான் கொடுக்கிறன்" என்றான். அப்ப சரிடா என்றார்.  Share/Save/Bookmark

தவறுகளுக்கு தண்டனையில்லையேல் எதுவும் முற்றுப்புள்ளியில்லை

அடுத்தவனின் வலி
மற்றவனுக்கு ஆறுதல் அல்ல
எமது தாகம்
அடுத்தவரின் கண்ணீரால் தீராது
மருத்துவனுக்கு மனித உயிர்தான் பெரிது
அது யாருடையது என்பதல்ல

முள்ளிவாய்க்காலும்  கொஸ்கமவும்  ஒன்றல்ல
இராட்சத யானையும் கொசுவும்   - எனினும்
எரிகின்ற சுவாலையில்
மனம் ஏறி இறங்குகிறது
ஆறாத புண்
அடுத்தவரையும் ஆற்றுப்படுத்தாது
தவறுகளுக்கு தண்டனையில்லையேல்
எதுவும் முற்றுப்புள்ளியில்லை
இன்றைய போராட்டம்
எங்களுக்கும் அவர்களுக்குமானதல்ல
புத்தபகவானுக்கும் பிக்குகளுக்குமானது

பல ஆயிரம் மக்கள் இறந்தபோது
அவர்கள் கொண்டாடினார்கள்
கிரிபத்தோடும் வெடியோசையோடும்
நாங்கள் துளியளவும்கொண்டாடப்போவதில்லை
வலி அறிந்தவர் என்பதால் மட்டும் அல்ல
மனிதம் நிறைந்தவர் என்பதால் /
நல்ல தலைவனால் வளர்க்கப்பட்டவர் நாம்          
    


Share/Save/Bookmark

ஞாயிறு, 5 ஜூன், 2016

இம்மண்ணிற்ற்க்காய் மரணித்தவரிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்ற்கிறோம்

இன்று பொன் சிவகுமாரனின் நினைவுதினம்.எமது போராட்டம் தோற்றிருக்கக்கூடாது. போராட்டதோல்விக்கு பல காரணங்கள்.அதில் முக்கிய அகக்காரணி : போராளியாகிய வீதம் போதாமை - சில குடும்பங்களே அதிக சுமையை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்.
இன்று எங்கள் இனம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. உயிர் வாழும் நாம்    இம்மண்ணிற்ற்க்காய்   மரணித்தவரிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்ற்கிறோம். எங்கள் இனம் தப்பவேண்டுமானால் சில தசாப்த வருடங்களுக்கு பிறகாவது எமது இனம் போராடவேண்டும். அதுவரை சிங்கள அரசோ இந்தியாவோ எம்பலத்தை விட்டுவைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது பல கோணத்தில் தமிழ்த்தேசியத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது.எங்கள் மக்களைக்கொண்டும் தமிழ்த்தேசியத்தை அழிப்பது கவலை தருகிறது .Share/Save/Bookmark

சனி, 4 ஜூன், 2016

இறுதி உரையாடல்

தைமாதம் 2009 ஒரு இரவு ஆரம்பப்பொழுதில்  தலைவரைச் சந்தித்தோம்.
அப்பொழுது பரந்தனில் இராணுவம் இருந்தது. தலைவரின் நாம் சந்தித்த முகாமும் ஏற்றகனவே   விமானத்தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.நான்,ரேகா,அன்பழகன்,நடேசன் அண்ணைதமிழேந்தி அண்ணையும் சுமார் 3-4 மணிநேரம் ஒன்றாகயிருந்தோம்.   அன்று ஒன்றாகயிருந்து கொத்துரொட்டி சாப்பிட்டோம்.எனக்கு அண்ணையின் இடத்து கொத்துரொட்டி சரியான விருப்பம்.அண்ணைக்கும் தெரியும் .நான் அண்ணைக்கு அருகாமையில் இருந்தேன் .இதை ஒருக்கா சாப்பிடுங்கோ என்று வேறுவிதமாய் செய்த கொத்துரொட்டியையும் தனது கையால் எனக்கு பரிமாறினார்.அதுதான் அவருடன் ஒன்றாய் உணவருந்திய கடைசி நிமிடங்கள்.

 பின் புதுக்குடியிருப்பில் பொட்டம்மானுடன் தலைவரை சந்தித்தேன்.அதுதான் எனது தலைவருடனான  இறுதி உரையாடல். ஒரு மணித்தியாலத்திற்கு குறைவான நேர சந்திப்பு. கூடுதலாக மக்கள் பிரச்சனையைப்பற்றித்தான் கதைத்தார். நான் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்ற்பட்டவர்களை பொது மருத்துவமனைகளுடன் இணைத்துள்ளோம் என்பதை தெரிவித்தேன். தொற்று நோய்கள்வராமல் இயன்றவரை தடுப்போம் என்பதையும் தெரிவித்தேன். அம்பாறையில் அப்போது கடமையில் இருந்த மருத்துவர் வளர்பிறை என்னிடம்தான் மேலதிக மருத்துவ ஆலோசனைகளை பெறுவார். அவருக்குள்ள சில பிரச்சனைகளையும் நான் அண்ணையிடம் தெரிவித்தேன். அண்ணை சில உதவிகளை செய்ய பொட்டம்மானுக்கு கூறினார். இது இறுதியுரையாடலாய்   போனது துரதிஷ்டம்தான்.  


Share/Save/Bookmark