செவ்வாய், 7 ஜூன், 2016

தவறுகளுக்கு தண்டனையில்லையேல் எதுவும் முற்றுப்புள்ளியில்லை

அடுத்தவனின் வலி
மற்றவனுக்கு ஆறுதல் அல்ல
எமது தாகம்
அடுத்தவரின் கண்ணீரால் தீராது
மருத்துவனுக்கு மனித உயிர்தான் பெரிது
அது யாருடையது என்பதல்ல

முள்ளிவாய்க்காலும்  கொஸ்கமவும்  ஒன்றல்ல
இராட்சத யானையும் கொசுவும்   - எனினும்
எரிகின்ற சுவாலையில்
மனம் ஏறி இறங்குகிறது
ஆறாத புண்
அடுத்தவரையும் ஆற்றுப்படுத்தாது
தவறுகளுக்கு தண்டனையில்லையேல்
எதுவும் முற்றுப்புள்ளியில்லை
இன்றைய போராட்டம்
எங்களுக்கும் அவர்களுக்குமானதல்ல
புத்தபகவானுக்கும் பிக்குகளுக்குமானது

பல ஆயிரம் மக்கள் இறந்தபோது
அவர்கள் கொண்டாடினார்கள்
கிரிபத்தோடும் வெடியோசையோடும்
நாங்கள் துளியளவும்கொண்டாடப்போவதில்லை
வலி அறிந்தவர் என்பதால் மட்டும் அல்ல
மனிதம் நிறைந்தவர் என்பதால் /
நல்ல தலைவனால் வளர்க்கப்பட்டவர் நாம்          
    


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக