திங்கள், 30 ஜூலை, 2012

நாடு இழந்தவனின் கண்ணீர்த்துளி
Share/Save/Bookmark

சனி, 28 ஜூலை, 2012

இறுதி ஆசை1,

அவனது சிறுபராயம் விளையாட்டில் கழிந்தது.கிட்டிப்புள்ளு,
கிளித்தட்டு,கிரிக்கட்,உதைபந்தாட்டம் என ஒரே விளையாட்டுத்தான்.
பாடசாலை அணிநடை,மெய்வல்லுனர் அணியிலும் இருந்தான்.

அவன் ஊரில் ஓரளவு பிரபல்யமான கோவில் இருந்தது.அந்தக்கோவில் 
கொடி ஏறினால் பத்து நாள் திருவிழா நடக்கும். நாலாம்,ஏழாம்,ஒன்பதாம்
திருவிழாக்களுடன்   பூங்காவனமும் கோலாகளமாய்   நடக்கும்.எல்லா 
நாள் திருவிழாவிலும் அவனது சமுகமும் இருக்கும். மேளக்கச்சேரிகளுக்கு 
முன் வரிசையில் வாயை ஆவென்றபடி இருப்பான்.பின் வீட்டில் கோயில் 
கட்டி அந்தக்கோயில் கொடிஏறும்.அங்கயும் மேளக்கச்சேரி இருக்கும்.
தகர ரின் எடுத்து மூடியை கழற்றிவிட்டு பழைய கொப்பித்தாள்களை 
அந்தப்பக்கம் வைச்சு சைக்கிள் ரியுப் ரப்பர் எடுத்து ரின் மூடி மாதிரி 
சுற்றிக்கட்டுறது.பிறகு அந்தப்பக்கம் தடியால் அடிச்சு மற்றப்பக்கம் 
தாளம் போட கிட்டத்தட்ட மேளச்சத்தம் வரும்.வீட்டுத்திருவிழாவில
மேள அடி இப்படித்தான் நடக்கும்.
       
ஒரு நாள் இப்படித்தான் பிஸ்கட்டுகளை கடவுளுக்குப் 
படைத்துவிட்டு சாமியை  பல்லக்கு மாதிரி அவனும் தம்பியும் 
வீட்டைச்சுற்றி தூக்கி வந்தனர்  .அப்ப அவனது சித்தி கூப்பிட்டுச் சொன்னா 
படைச்ச பிஸ்கட்டுகளை நாய் சாப்பிடுதென்று ,உடன அவனும் 
தம்பியும் அந்த இடத்திலேயே சாமியை போட்டிட்டு நாயை 
கலைத்துப்போனார்கள் .அதுக்குப்பிறகு   அவனது தாய் 
அவனை கோவில் கட்டி விளையாட விடுறயில்லை.

அவன் எண்பதுகளில இயக்கத்திற்கு சேர்ந்து அரசியல் வேலைகள் 
செய்தான்.அப்ப எல்லாம் அவன் அடிக்கடி நாளுக்கு நூறு கிலோமீட்டர்வரை 
சைக்கிள் ஓட வேண்டியிருக்கும்.அப்ப கராத்தே நீலப்பட்டிவரை பழகினான்.
தொண்ணூறுகளில் சில காலங்கள்(பெருமாள் கோவில் அருகில்) Body building பழகினான். 
பின் இயக்கத்தில் முழுமையாக Kick boxing பழகினான்.யோகாசனத்தை நண்பர்களுக்குப் பழக்கினான்.
இயக்கத்தில் கொமாண்டோ இராணுவப்பயிற்சியை பெற்றிருந்தான்.வன்னி 
முழுக்க புழுதிக்குள்ளாலும் ,கிளைமருக்குள்ளாலும் அவனது மோட்டார் 
சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்.  

2,

 அவன் 2010 இல் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
பம்பைமடு மருத்துவமனையில் இருந்து அவனை கொண்டு வந்திருந்தார்கள்.
அவனுக்கு இடுப்புக்குக்கீழ் இயங்காது.வலது பின் இடுப்புப்பக்கமாய் 
படுக்கைப்புண் போட்டு பெட்சீட் சரியான மணத்துடன் ஊறிக்கொண்டிருந்தது.அவனுக்கு 
சரியான காய்ச்சலும் டாக்டர் பரிசோதிச்சு சொன்னார்.காயத்தால் 
வலது இடுப்பு எலும்பு உக்கிப்போட்டுது . "செப்டிசீமியா" ஆளை 
காப்பாத்தேலாது.
உங்கட உறவுகளோட கதைக்கோணும் என்று டாக்டர் கேட்க ,யாரும் 
இல்லை .என்னென்டாலும் தன்னோட கதையுங்கோ எதுக்கும் 
யோசிக்காதையுங்கோ என்றான்.
டாக்டர் சிரமப்பட்டுச் சொன்னார் தம்பி நீங்கள் இரண்டு நாள்தான் 
உயிரோடு இருப்பியள். அவன் எந்த முகமாற்றங்களுமற்று தலையாட்டினான்.
வலியால் முனகி முனகி இன்று இறந்தான்.டாக்டரும் வந்து உறுதிப்படுத்திவிட்டுப்போய்
விட்டார்.தாதி பிரேத அறைக்கு உடலை அனுப்ப காத்து இருக்கிறாள்.
டாக்டரும் கேட்டிருந்தார் உனது இறுதி ஆசை ஏதாவது இருந்தால் சொல் 
நிறைவேற்றுகிறேன் என்று.தாதியும் இதே கேள்வியை கேட்டிருந்தாள்.
அவன் "தமீழீழம் "தான் என்றிருந்தான்.

முற்றும் 

-நிரோன்-
Share/Save/Bookmark

இலங்கை ஒரு ஜனநாயக நாடு
1,

அவன் 
ஒரு புலித்தளபதி 
அவன் குரலுக்கே 
சிங்கள இராணுவம் ஓடிற்று 
அவன் 
கிடைத்த ஆயுத, ஆளணி வளங்களுடன் 
இறுதிவரை 
களத்தில் நின்றான்.
புலிகள் 
எந்த நாட்டின் துணையுமின்றி 
இருபது நாட்டுக்கு மேல் 
உதவி பெற்று
சர்வதேச சட்டங்களை மதியாத 
அரக்கர்களுடன் மோதினர்.
சர்வதேசம் 
புலிகளுக்கான 
ஆயுத விநியோகத்தை 
தடுத்துவிட 
புலிகள் தோற்றனர் 

அரசாங்கம் 
ஒலிபெருக்கியில் 
புலிகளை வருமாறும் 
கருணா பிள்ளையான் போல் 
மக்களாகலாம் என்று 
ஆசை மொழி பேசி 
அரவணைப்பது போல் 
அழைத்தது 
சர்வதேச முக்கியஸ்தர்கள் 
தொடர்புகொண்டு 
உயிர் பாதுகாப்பு உத்தரவாதம் வேற 
அதனால் 
பல மூத்த போராளிகளும் 
இராணுவ வலைக்குள் சென்றார்கள் 

அவன் உள் சென்று  
நிலத்தில் இருக்கையில் 
அவனை வருமாறு 
இராணுவ வீரன் ஒருவன் அழைத்தான் 
அவன் போகும் போது
தன்னுடன் நின்ற இளம் போராளியிடம் 
நீ போய் மக்களோட இரு 
என்னை அடையாளம் கண்டுட்டாங்கள் 
அவன் போனான் 
அவன் மண்வெட்டிப்பொல்லுகளால் 
அடித்து,அடித்தே கொல்லப்பட்டான் 
அவனைப்போல் 
பலர் கொல்லப்பட்டனர்.
இறுதியுத்தம் ஒன்றை செய்து 
இறந்திருக்கலாம் என்று 
அவர்கள் நினைத்திருப்பார்கள் 

இந்தப்போரில் 
இறந்த புலிகளைவிட 
சிங்கள இராணுவம் அதிகம் 
மக்களையும் 
சரணடைந்த புலிகளையும் 
கொன்று 
வஞ்சம் தீர்த்தது சிங்களம் 

மீண்டும் மீண்டும் 
துட்டகைமுனு 
எல்லாளன் கதை 

2,

அவன் புலிகூட இல்லை 
ஆனாலும் 
புலிச் சந்தேக நபராய் 
கைது செய்யப்பட்டான் 
சிறை 
அரசாங்கத்தின் பாதுகாப்பில் 
சிறை 
அடித்தும் 
இரு கால்களையும் 
இழுத்துப்பிரித்தும் 
அணு அணுவாய்க் கொல்லப்பட்டான் 
நண்பர்கள் இன்னும் சாகவில்லை 

யாரும் கைது செய்யப்படவில்லை 
வெலிக்கடை ,பிந்துனுவேவ
அரசாங்க சிறைக்கொலைகளைப்போல்
இன்னும்  
 யாரும் கைது செய்யப்படவில்லை 
மூடிய சிறைக்கொலைகளுக்கே
நீதி வழங்கா (அ)நீதிமன்றங்கள் 
வெள்ளை  வான் கொலைகளுக்கா 
நீதி தரப்போகின்றன  

அவனின் ஏழைப் பெற்றோரின் 
அழுகை 
கடவுளில் ஐயுறவை ஏற்படுத்திற்று  

இன்னும் 
எங்கும் பேசிக்கொள்கிறார்கள் 
இலங்கை ஒரு ஜனநாயக நாடு 

இன்னும் 
பெட்டியில் நச்சுப்பாம்புகளாய் 
அவர்களுடன் அடிவருடிகள்          - நிரோன்-
Share/Save/Bookmark

வியாழன், 26 ஜூலை, 2012

ஊன்றுகோல்
எங்கட ஊர் யாழ்ப்பணத்தில ஒரு கிராமம் .ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின்ர 
தொடக்கம் அது .
அம்மா என்னை,தம்பியாக்களை தட்டி எழுப்பினா எழும்புங்கோ எழும்புங்கோ 
நான் எழும்பினன் எனக்கு அடுத்தவனும் எழும்பி சோம்பல் முறித்தான்.
சின்னவன் நல்ல நித்திரையில் கிடந்தான்.நான் எழும்பி வந்து திண்ணையில 
கொஞ்சநேரம் குந்தியிருந்தன்.  முன்னுக்கு மல்லிகைப்பந்தல் வாசம் 
மூக்கைத்துளைத்தது.பந்தலுக்கு கீழ மல்லிகை பூக்கள் கொட்டிக்கிடந்திது.


Share/Save/Bookmark

திங்கள், 23 ஜூலை, 2012

குருதிதமிழன் வடித்த கண்ணீரும் (குருதி)
தேசத்திற்காய் பாய்ச்சிய குருதியும் 
காய்வதில்லை -மாறாய் 
அவன் 
இலச்சியத்தை வரையும் ஊற்றாய்  


Share/Save/Bookmark

அஞ்சல் ஓட்டம்விடுதலை 
ஒரு மனிதனின் மூச்சு 
அது கிடைக்கும் வரை 
அவன் அறிந்தும் /அறியாமலும் 
பரம்பரை பரம்பரையாய் 
அஞ்சல் ஓட்டம் தொடரும் 


Share/Save/Bookmark

சனி, 21 ஜூலை, 2012

வளர்த்த மாடு மார்பில் பாய்ந்தது


வளர்த்த மாடு
மார்பில் பாய்ந்தது 
அடுத்தவனிடம் 
கூலி வாங்கி 
தாயை கொன்றது 
கேவல மானிடம் 
Share/Save/Bookmark

சர்வதேசம் ஒரு கானல் நீர்
பார்க்க கேட்க 
அழகானது சர்வதேசம் 
ஆனால் 
அதற்குள் ஒளிந்திருக்கிறது 
யாரைச்சாப்பிட்டாவது 
தான் வாழும் சுயநலம் 
இது தின்ற நாடுகள் 
ஒன்றா இரண்டா

சர்வதேசம் 
ஒரு கானல் நீர் 


Share/Save/Bookmark

கறுப்பு பணம்களின் கூட்டுச் சாம்பாறு
நாட்டு நலனற்று
நாட்டுக்கு நலமடிக்க 
ஒன்றாகும் கூட்டு 
கறுப்பு பணம்களின்   
கூட்டுச் சாம்பாறு 
பிச்சைக்காரனின் 
வாந்திபோல 
இலங்கையில் 
ஒரு கூட்டாச்சி 


Share/Save/Bookmark

தனக்கே குழி பறிச்ச சிங்கம்


தனக்கே குழி பறிச்ச சிங்கம் 
தனது பலம் அறியாமல் 
ஊர்ப்பலத்தில் வீங்கும் 
மாதானமுத்தா 
உலகை வைச்சு 
தனிமனுசனை அடிச்சிட்டு 
அதற்கு உரிமை கோரும் பேடி   


Share/Save/Bookmark

வெள்ளி, 20 ஜூலை, 2012

ஈழ ஆத்மா சிங்களத்தையோ அடிவருடிகளையோ மன்னிக்காது

சிங்களத்தால் 
ஈழத்தில் நடந்த கொடுமைகள் 
ஒன்றா/இரண்டா 
அடிவருடிகள் 
சிங்களத்திற்கு 
கும்பிடு போடலாம் -ஆனால் 
ஈழ ஆத்மா 
சிங்களத்தையோ
அடிவருடிகளையோ
மன்னிக்காது     


Share/Save/Bookmark

வியாழன், 19 ஜூலை, 2012

இறமையுள்ள நாடு?


சிறுவர் கடத்தப்படுகின்றனர் 
மதம் மாற்றப்படுகின்றனர் 
வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் 
துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் 
முன்,பின்புலத்தில் 
அரச பயங்கரவாதம் 
இதுவரை 
காணாமல் போன சிறுவரின்   
எண்ணிக்கை தெரியா 
இறமையுள்ள நாடு?


Share/Save/Bookmark

சிங்கள அரசுசிங்கள அரசு 
கொன்ற உயிர்கள் 
மூன்று இலச்சத்திட்கு மேல் 
இருந்தும் 
குடித்த இரத்தம் போதவில்லை 


Share/Save/Bookmark

தமிழரை உலகம் தன்பங்கிற்கு ஏமாற்றுகிறதுதமிழரை 
உலகம் 
தன்பங்கிற்கு 
ஏமாற்றுகிறது 

செவிடனின் காதில் 
எத்தனை காலம் 
தமிழன் ஊதுவது?


Share/Save/Bookmark

தாய் நிலம் தரை மீனாய் துடிக்கிறது


தாய் நிலம் 
தரை மீனாய் துடிக்கிறது 
பேய்கள் கூடி 
அபிவிருத்தி என்கின்றன 
வாய் பேசமுடியாமல் 
ஒரு நாய் வாழ்க்கை 
Share/Save/Bookmark

புதன், 18 ஜூலை, 2012

ஒரு இனம் அழிக்கப்படுகிறது
சிங்களனாலும் அடிவருடிகளாலும் 
உலக உதவி பெற்று 

கொலை செய்யப்பட்ட இனம் 
தற்கொலை செய்ததாய்க்காட்ட 
எத்தனை புனைவுகள் ஒ---

யாரை யார் ஏமாற்றுவது?
நித்திரைபோல் கிடக்கும் 
உலக மனட்சாட்சியை 
யார் எழுப்புவது? 
போலீஸ்தான் 
கள்ளனாகையில் 
நாம் எங்கு போவது?     


Share/Save/Bookmark

ஒரு நாள் எய்த அம்பு திரும்பிவரும்


ஒரே மொழி பேசி 
ஒட்டுண்ணியாகி 
சத்துருஞ்சி கொழுத்தவர் 
தமிழரை கொன்றவருடன் கூட்டு 
மீண்டும் மீண்டும் துரோகம் 
அவர்களின் 
பிச்சை வாழ்விற்காய் 
தமிழின அழிப்பு    

ஒரு நாள் 
எய்த அம்பு 
திரும்பிவரும் 
Share/Save/Bookmark

செவ்வாய், 17 ஜூலை, 2012

இந்தியா தன் நலனுக்காய் எங்களை சாகவிடுகிறது

இலங்கையில் ஜனநாயகம் படுத்தும்பாடு 
நூறு வருடங்களுக்கு முன் 
கிழக்கு மாகாணத்தில் 
எண்பத்திஏழு வீத மக்கள் தமிழர் 
இன்று முப்பத்திமூன்று வீதம்தான் தமிழர் 
இன அழிப்புக்கு இலங்கைஜனநாயகம் 
துணைபுரிகிறது 
அதேபோன்று நிலமும் 
ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது 
இந்தியா தன் நலனுக்காய் 
எங்களை சாகவிடுகிறது 
அடிவருடிகள் மட்டும் பிழைத்துக்கொள்கிறார்கள்     
Share/Save/Bookmark

செவ்வாய், 10 ஜூலை, 2012

விழிகள் கரைய கரைய


அழுதோம் 
விழிகள் கரைய கரைய 
விடைகள் அற்று அழுதோம் 
கண்ணீரை துடைக்க யாருமில்லை 
கண்ணீர் வற்றி கண்கள் புண்ணாகின 
அழவும் உடலில் தெம்பு அற்று வீழ்ந்தோம் 
வீழ்ந்தோம்தான்
உலகை நம்பியதால்  வீழ்ந்தோம்தான்
ஆனால் மீளவும் எழுவோம் 
விழ விழ எழுவோம்   
விடியும்வரை ஓயோம் 
Share/Save/Bookmark

ஞாயிறு, 8 ஜூலை, 2012

உண்மைக்கதை -10
அவருக்கு இப்ப இயலாது.எண்பது வயது .சலரோகம்,அஸ்மாவோட
கண் தெரியுறதும் குறைஞ்சுபோச்சு.சத்திரசிகிச்சை செய்தும் பெரிய 
முன்னேற்றம் இல்லை.
அவர் யாழ்ப்பாணத்தில உள்ள பிரபல கோவில் ஒன்றுடன் 
பரம்பரையில் தொடர்புள்ள குடும்பத்தில் பிறந்தார்.அவரது குடும்பம் 
சாதாரண விவசாயக்குடும்பம்.அவர் தனது ஆரம்பக்கல்வியை 
ஊரில் படித்துவிட்டு தொடர்கல்வியை யாழ் (சென்றல்) மத்திய கல்லூரியில் கற்றார். கல்வியில் குறிப்பாக கணிதபாடத்தில் மிகவும் கெட்டிக்காரனாக 
இருந்தார்.பாடசாலை மட்ட உள்ளக விளையாட்டுக்களில் 
திறமைகளை காட்டினார்.கிரிக்கட் ,உதைபந்தாட்டம் ,டேபிள் டெனிஸ்,
பட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வமாய் இருந்தார். Share/Save/Bookmark

வெள்ளி, 6 ஜூலை, 2012

சுஜோவின் ஹைக்கூ/விடுகதைக்கவிதைகள் -021,
இதயங்களுள் நுழைந்த ,
கணத்தில் ஒளிர்ந்து முடிந்த மெழுகுதிரி 
கரும்புலி 

2,
மனதை தின்னும் பூச்சி 
மழைக்கால மாரித்தவக்கை 
பொறாமை             

3,
ஷெல்லை விதைக்க  
 இழவுடன் உழவு 
அறுவடை தலைகள் "முள்ளிவாய்க்கால்"  

4,
பகுத்தறிவு இல்லை 
ஆனால் மேதைப்படிப்பு 
ஓட்டைப்படகு 

5,
மோட்சம் இழந்த 
காவிக்குள் புகுந்த சாத்தான்கள் 
சாமிமார்/பிக்குகள் 

6,
கடதாசி உருவில் 
கடவுளும் பிசாசும் 
காசு /பணம் 

7,
வீட்டுப்பிரச்சனையால் 
திட்டித்தீர்க்கிறார் ஐயர் 
மந்திரம்   

8,
மனிதனுடன் கூட வாழும் 
பற்சூத்தை 
லஞ்சம் 
9,
கற்பனையில் வாழ்தல் /
கானல் நீர் 
போலி வாழ்க்கை 
10,
கண் மூடி இரத்தம்
குடிக்கும் பூனை 
போர்க்குற்றவாளி 
11,
ஓயும்வரை
ஓய்வெடுக்காமல்  ஓடும்வாகனம் 
இதயம் 

12,
சாக்குருவி தலைக்குமேல் 
கத்தியபடி பறக்கிறது .
வேவுவிமானம் 

13,
கன்றை தவறவிட்டு 
பசு கத்துகிறது 
ஈழத்தாய்

14,
காட்டுத்தீ பரவ 
விலங்குகள் துடித்து மாண்டன 
கர்ப்பிணித்தாய் மரணம் 

15,
கிளிக் இல்லாமல் 
படம் எடுத்தான் 
தலையாட்டி 

16,
அம்மா குழைத்துத்தரும் 
சோற்றுருண்டை அல்லது 
முட்டைப்பொரியல் "நிலா "

17,
இசைக்கமுடியா மொழி 
கல்மனதையும் கரை(லை)க்கும் ஒலி
மழலை மொழி 

18,
அரசை/உலகத்தை  நம்பி 
சரணடைந்தனர் போராளிகள் 
விட்டில்ப்பூச்சிகள் 

19,
வேலி பயிரை தின்றகதை பழையது 
வேலி நிலத்தையும் தின்னும் கதை புதியது 
ஈழம் 

20,
வாழ்வின்
மின்மினிப்பூச்சி 
துக்கமும் மகிழ்வும் 

21,
பஞ்சு உள்ளம்,
உயிரே  வியர்க்கும் அணுவை மீறிய சக்தி
கரும்புலி 

22,
அணு அணுவாய் சாதல் 
அரிசி மாவாதல் 
திலீபன் 

23,
நல்லபாம்பு வேஷம்போடும் 
புடையன் 
எதிர்க்கட்சி (ஸ்ரீலங்கா)

24,
தொட்டால் சுருங்கி 
பட்டால் காஞ்சோண்டி 
ஒட்டுக்குழுக்கள் 

25,
  அடைக்கோழி
அடைகாக்கும் முட்டைகள் 
கறுப்புப்பணம் 

26,
நிலத்திட்குக்கீழ்
தாட்டு வைத்திருக்கும் சாராயம் 
 கறுப்புப்பணம் 

27,
பருந்து வாயில் 
கோழிக்குஞ்சு 
ஈழம் 

28,
கழற்றக்கூடா செட்டை
சுயத்தின் பெருமை 
மானம் 

29,
குமிழ் எரியும் 
வயரில்லா மின்சாரம் 
பாசம்      

30,
செத்த பூனையை 
சாப்பிடுகிறது எலி 
ஒட்டுக்குழுக்கள் 

31,
எத்தனை வீடிருந்தும் 
சொந்தமாவது 
கல்லறை 
32,
யுத்தம்வரை 
சண்டியருடன் சமாதானம் 
நெருப்பெட்டி 

33,
எரிய எரிய எரிக்கும் 
ஆறாவது விரல் 
சிகரட் 

34,
திராட்ச்சைச்சாறை 
இராணுவம் திருடி குடித்தது 
பிணம் கிடக்கிறது 


35,
தங்கக்காசு 
நகை ஆகிறது 
தாய்மை 

36,
கலவரம் 
அமைதிப்பேரணியில் 
ஜனநாயகம் 

37,
குறைப்பிரசவமாயிற்று 
ஜனநாயகம் 
குற்றவாளியால் நீதிபதி நியமனம்  
(நல்லிணக்க ஆணைக்குழு)

38,
கல் கடவுளாயிற்று 
உண்டியல் நிரம்பிற்று 
யதார்த்தம் 

39,
மூங்கிலை ஒதுக்கியவர் 
புல்லாங்குழலை இரசிக்கிறார் 
முயற்சி திருவினையாக்கும் 

40,
தவளை விழுங்கிய 
பாம்பு 
ஈராக்கில் அமெரிக்கா

41,

மார் தட்டி 
சத்தம் போட்டு வா! என்று அழைக்கிறான் 
கோயில் மணியோசை 

42

காதோடு காதாய்
இரகசியம் காவும் காலில்லா ஊர்தி 
நடமாடும் தொலைபேசி 

43,
உணவிருந்தும் உண்ணவில்லை 
"விரதம்"+உணவில்லாததால் உண்ணவில்லை 
"பட்டினி"=விடுதலைப்போராட்டம் 

44,
மலத்தில் மொய்த்த இலையான் 
உணவில் (நெருப்புக்காயச்சல்)
"இராணுவம் மக்களுக்கு உதவி"

45,
போர் என்றால் போர் 
சமாதானம் என்றால் சமாதானம் :ஜே ஆர் 
தூக்கில் தொங்கிற்று ஜனநாயகம் 

Share/Save/Bookmark