வியாழன், 22 டிசம்பர், 2011

உண்மைக்கதைகள்-04

வெறும் நூலில் தொங்கும் வாழ்க்கை

அவனைப்பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.பாடசாலையில்
படிப்பில் எப்போதும் முதலாம் பிள்ளையாய் வருவான்.அவனுக்கு
கணிதம்,விஞ்ஞானம் ,விளையாட்டில் அதிக விருப்பம்.பள்ளிக்கூடத்தில்
வழமைபோல எல்லாருக்கும் பட்டப்பெயர் இருக்கும்.அவனின்
பட்டப்பெயர் விஞ்ஞானப்பண்டிதர்.பண்டிதர் என்றே சகமாணவர்
கூப்பிடுவார்கள் .அவனுக்கு விஞ்ஞானியாய் வரவேண்டும்
என்பதில் பித்துப்பிடித்திருந்தான்.இதற்கு சமுகம் எந்தளவுக்கு
காரணம் என்று புரியவில்லை.அவனுக்கும் அந்த திறமை
இருந்ததோ என்று சரியாகத் தெரியவில்லை.
                                                 விஞ்ஞானிகளின் வாழ்க்கையை/களை 
தேடி தேடிப்படித்தான்.உலகிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு
விண்ணப்பித்துக்கொண்டும் இருந்தான்.தன்னை அதற்கு தயார்
படுத்துவதாய் மூட நம்பிக்கையிலும் இருந்திருக்கலாம்.அவனது
அதிஷ்டமோ/துரதிஷ்டமோ இந்தியாவில் உள்ள சிறந்த பல்கலைக்
கழகத்திற்கு தேர்வாகியிருந்தான்.அப்போதுதான் பிரச்சனை
ஆரம்பமாகிற்று.பணம்தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்
என்பதை அறியாமல் வாழ்ந்த ஏழையின் சுயத்தை புரிந்ததுடன்
முதல் தடவையாய் உலகில் தனித்துப்போனதாய் உணர்ந்தான்.
கல்வியில் அவனது ஆர்வம் குறையத்தொடங்கிற்று.
                                                1981 இல் யாழ் நூலக எரிப்பினை
சிங்கள அரசு திட்டமிட்டு செய்திருந்தது.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
எம்பாடசாலையில் ஒருநாள் பகிஸ்கரிப்பு செய்தோம்.அதில் அவன்
முக்கிய பங்குவகித்தான்.அந்த பாடசாலையில் 1956 இற்கு பிறகு
நடந்த பகிஸ்கரிப்பாக அது இருந்தது.அச்செயற்பாட்டுடன்     அவனது
இன விடுதலைச் செயற்பாடுகள் ஆரம்பித்தன.சந்திப்புகள்,சிறிய
செயற்பாடுகள் என காலம் வீணாகவும் கரைந்தது.1983 இனக்கலவரத்துடன்
திட்டமிட்ட அளவு பிரயோசனமாக செய்யமுடியாவிட்டாலும்
சிறு செயற்பாடுகளை செய்துமுடித்தனர் .
                                            1983 இன் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள்
இயக்கத்தில் இணைந்துகொண்டான்.காலம் எல்லாமுமாய்
ஓடிற்று.இப்போது சிங்களத்தின் ஜெயசுக்குறு காலம் "சிறுவர் பட்டினிச்
சாவு தவிர்ப்புத்திட்டம்" சிறுவர்களை காக்க நடைமுறைப்படுத்தப்பட்டது.
திட்டமிடல்,கண்காணிப்பில்  ஒருவனாக திட்டத்தை வெற்றியுறச்செய்து
சிறுவர்களைக் காத்தான்.2000 ஆம் ஆண்டு கிளிநொச்சி மீள்குடியேற்றம்
நகர் திட்டமிடலில் முக்கிய பங்குவகித்தான்.
                                            சமாதானம் சறுக்குவதும் ஏறுவதுமாக இருந்து,
ஈற்றில் முள்ளிவாய்க்காலில்   அரச கொடூரம் நிகழ்ந்தது.அவனும்
ஓய்வற்று உழைத்தான்.இறுதி ஐந்து மாதங்களில் மூன்று தடவை
இரத்ததானமும் செய்திருந்தான்( குறைந்தது மூன்று மாதத்திற்கு
ஒரு தடவைதான் இரத்ததானம் செய்யலாம்).வைகாசி 2009 உடல்,
உள தளர்வோடு கண்பார்வையும் பாதிக்கப்பட்டிருப்பதை முதல்
தடவையாக அவன் மனம் ஏற்றுக்கொண்டது.இறுதிவரை தலைமையால்
கொடுக்கப்பட்ட கடமையை செய்து ,இயக்க முடிவுக்கு இணங்க
இறுதியாய் இராணுப்பகுதிக்குள் சென்ற மக்களுடன் மக்களாய் சென்று (வைகாசி 17 ) நலன்புரிமுகாமில் இருந்து தப்பினான்.
                                            இப்போது அவனது காலம் தனிமையில்  மனது சுமக்கமுடியா சுமையுடன் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.


                                                         
        


Share/Save/Bookmark

சனி, 26 நவம்பர், 2011

மாவீரர்கள் அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்மாவீரர்கள்
காலத்தால் அழியாதவர்கள்
அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்
விடுதலைத் தீயை
தமக்குள் சுமந்து ,
பாசமழையை
எம்மீது கொட்டியவர்கள்
வீரர்களுக்கு சாவு இல்லை
இவர்களுக்கு ஈடு இல்லை


எங்களுக்காய் வாழ்ந்து
வீழ்ந்தவர்
என்றும் எம்மோடு வாழ்வர்
விதையாய் ஆழ்ந்து முளைவர்     


Share/Save/Bookmark

வெள்ளி, 18 நவம்பர், 2011

எழுத்தாளர்,மாவீரர் மலரவன்


மலரவன் - இவன் கோட்டை,காரைநகர்,மாங்குளம்,சிலாவத்துறை,ஆனையிறவு ,மணலாறு
உள்ளிட்ட பல இராணுவ முகாம் தாக்குதலில் பங்குபற்றி வளலாய் தொடர் காவலரண் (24/11/1992)
தாக்குதலில் கப்டன் மலரவனாய்  வீரச்சாவு எய்தினான்.
                                                பசிலன் மோட்டார் அணியின் துணைப் பொறுப்பாளராயும்,
வி.பு களின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு   பொறுப்பாளராயும்,யாழ் மாவட்ட 
இராணுவ அறிக்கை பொறுப்பாளராயும் கடமை செய்தான்.
                                               இவனது தந்தை ஒரு களமருத்துவர்.கொக்குளாய்,
முல்லைத்திவு,மாங்குளம்,ஆனையிறவு,மணலாறு(மின்னல் நடவடிக்கை ), 
பூநகரி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட களங்களில் பணிசெய்திருந்தார்.சில 
களங்களில் தந்தையும் மகனும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.


மலரவன் இவனது நாலு நூல்கள் வெளியாகி 
பெருமதிப்பு பெற்றுள்ளன.போர் உலா( நாவல்)-இலங்கை இலக்கிய 
பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல்
பரிசு பெற்றது. இதுவரை மூன்று பதிப்புகளை பெற்றுள்ளது.
போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இணையத்தில் வெளி 
ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
என் கல்லறையில் தூவுங்கள் ( சிறுகதைகள்,கவிதைகளின் தொகுப்பு)
மலரவனின் ஹைக்கூ கவிதைகள்( இலங்கையில் வெளியான நான்காவது 
ஹைக்கூ தொகுப்பாகும்)
புயல் பறவை ( நாவல்)- வட கிழக்கு மாகான சாகித்திய மண்டல பரிசு பெற்றது. Share/Save/Bookmark

சனி, 7 மே, 2011

யார் செய்தது குற்றம் ?

விடுதலைப் புலிகள் 
மக்களை பாதுகாக்கவே 
பல தடவைகள் 
பகிரங்கமாய் 
யுத்த நிறுத்தம் கேட்டிருந்தனர் 
மறுத்தது சிங்கள அரசு 
மக்கள் செறிபகுதியினுள் 
அதீத செல்,பீரங்கி,விமான தாக்குதலுடன் 
ஊடுருவின சிங்கள படைகள் 

யார் செய்தது குற்றம்?

அரசு 4 இலட்சம் மக்கள் இருக்க
70,000 ஆயிரம் மக்களே
உள் இருப்பதாய் கொடும் பொய் சொன்னது
3 இலச்சம் மக்களை 
மூடிய தேசத்தில் படுகொலை செய்வதே 
அரசின் திட்டமாக இருந்தது 
மிகக் குறைந்த உணவு,மருந்து வழங்கலை
வேண்டா வெறுப்பாய்ச் செய்தது 
விடுதலைப்புலிகள் 
தமது உணவை பகிர்ந்து கொடுத்தனர் 
அவசிய சத்திரசிகிச்சை மருந்துகளைக் கொடுத்தனர் 
பட்டினியில் வாடிய மக்களுக்கு 
இறுதிவரை கஞ்சி ஊற்றினர் 
காயமடைந்தவரை 
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் 
இடம்பெயர இடம்பெயர 
அரச,வங்கி,மருத்துவமனைகளை 
இடம்மாற்ற 
தம்மாலான அனைத்து 
உதவிகளையும் செய்தனர் 
மருத்துவசேவை  வழங்குதலில்
வி.பு.மருத்துவபிரிவினரே 
உச்ச பங்கு வகித்தனர் 
விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தல்,உதவி உடன் 
மக்கள் பதுங்ககழி அமைத்தனர் 
பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன  
வைகாசி 15 ஆம் திகதிவரை
வி.புலிகளின் நிர்வாகம் இயங்கிற்று 
மக்கள் சேவைக்காக மட்டும்
சில நூறு போராளிகள் வீரச்சாவு எய்தினர்  

யார் செய்தது குற்றம் ?

வி.பு.  மக்களின் விடுதலைக்காக
தூய மனதுடன் 
இறுதிவரை இயங்கினர் 
நடைமுறையில் 
சில தவறுகள் இருக்கலாம்-ஆனால்
சிங்களம் தவறுகளை 
மிகப் பெரிதாக உலகிற்கு காட்டிற்று 

வி.பு 
மக்கள் இராணுவலைக்குள்
செல்வதை விரும்பி இருக்கவில்லை 
அது ஏன்?
மக்களின் இன்றைய துயர் பதில் சொல்லும்    

தயவு செய்து 
விடுதலைப்புலிகளை ,
வி.பு தலைவனை 
நடுநிலையாக /சுயாதீனமாக 
ஆய்வு செய்யுங்கள் 
விடுதலைப் பற்றை புரிந்து
இன விடுதலைக்காக உழையுங்கள் 

                                                                   -சுருதி-


  


Share/Save/Bookmark