மலரவன் - இவன் கோட்டை,காரைநகர்,மாங்குளம்,சிலாவத்துறை,ஆனையிறவு ,மணலாறு,
உள்ளிட்ட பல இராணுவ முகாம் தாக்குதலில் பங்குபற்றி வளலாய் தொடர் காவலரண் (24/11/1992)
தாக்குதலில் கப்டன் மலரவனாய் வீரச்சாவு எய்தினான்.
பசிலன் மோட்டார் அணியின் துணைப் பொறுப்பாளராயும்,
வி.பு களின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு பொறுப்பாளராயும்,யாழ் மாவட்ட
இராணுவ அறிக்கை பொறுப்பாளராயும் கடமை செய்தான்.
இவனது தந்தை ஒரு களமருத்துவர்.கொக்குளாய்,
முல்லைத்திவு,மாங்குளம்,ஆனையிறவு,மணலாறு(மின்னல் நடவடிக்கை ),
பூநகரி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட களங்களில் பணிசெய்திருந்தார்.சில
களங்களில் தந்தையும் மகனும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.
மலரவன் இவனது நாலு நூல்கள் வெளியாகி
பெருமதிப்பு பெற்றுள்ளன.போர் உலா( நாவல்)-இலங்கை இலக்கிய
பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல்
பரிசு பெற்றது. இதுவரை மூன்று பதிப்புகளை பெற்றுள்ளது.
போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இணையத்தில் வெளி
ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
என் கல்லறையில் தூவுங்கள் ( சிறுகதைகள்,கவிதைகளின் தொகுப்பு)
மலரவனின் ஹைக்கூ கவிதைகள்( இலங்கையில் வெளியான நான்காவது
ஹைக்கூ தொகுப்பாகும்)
புயல் பறவை ( நாவல்)- வட கிழக்கு மாகான சாகித்திய மண்டல பரிசு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக