வியாழன், 15 செப்டம்பர், 2016

அநியாய உயிரிழப்புகள் நிறுத்தப்படவேண்டும்

விபத்துக்களும் அதனால் ஏற்படும் அநியாய உயிரிழப்புகளும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சில இடங்களில் அதிக விபத்து ஏற்படுவதுபோல் உள்ளது (உ+ம்)பளை. விபத்துகள் அதிகம் நடக்கின்ற இடங்களில் வேகக்கட்டுப்பாடு இறுக்கமாக(குறிப்பிட்ட நேரங்களிலாவது) கடைப்பிடிக்கவேண்டும். வாகனத்தின் தரம்,எண்ணிக்கை , வீதிகளின் தரம்/ மாற்று வீதிகள் , சாரதி,மக்களின் விழிப்புணர்வு  என்பனவற்றில் அதிக கவனம் எடுத்து அநியாய உயிரிழப்புகள் நிறுத்தப்படவேண்டும்.
( வாகனமும் தரமாய் இருந்து வீதியும் தரமாய் இருந்தால் அதிக வேகத்தில் ஓடமுடியாது ஏனெனில் அந்த வீதியில் அந்த வாகனம் மட்டும் பயணிப்பதில்லை)      



Share/Save/Bookmark

புதன், 14 செப்டம்பர், 2016

14/09/2016

நண்பா !
இன்றிரவே இறுதியாய் உணவருந்தினாய்
நாளை உன் யாகம்
தமிழன்னையின் பிள்ளை நீ
அன்றல்ல என்றும்தான் 


நெடுதூர பயணத்தில்
சூரியனை இழக்கையில்
அறிந்திருக்கவில்லை
நிலவும் இனி இல்லை என்பதை
தர்மம் சாவதில்லை
துயரக்கடலையும் தாண்டி
செங்கதிர்களாய் முளைக்கும்
விடிவெள்ளியாய் பூக்கும்   



Share/Save/Bookmark
Bookmark and Share