வியாழன், 27 அக்டோபர், 2016

கண்மூடியசகோதரர் "குழந்தைகளை"
கண்மூடமுன் பார்ப்பேனா?
நாடு இழந்தவனின் அவா 



Share/Save/Bookmark

செவ்வாய், 11 அக்டோபர், 2016

கடமையில் மூழ்கியிருந்தோம்

16/ 05/2009 , மாலை ஐந்து மணியிருக்கும் என ஊகிக்கிறேன். நானும் சுதர்சனும் காயமடைபவர்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தோம். இரண்டு சுமார் பத்து,பன்னிரண்டு வயது சிறுவர்கள் தனித்தனி சிறு உருளை மூட்டை வடிவில் சேலையால் சுற்றி இரத்தத்துடன் விக்கி விக்கி அழுதபடியே தூக்கிபோனார்கள் . என்ன என்று வினவினேன். தாய் ஷெல்லில் வயிற்றோடு சிதைந்து போனதாகவும் நெஞ்சோடு தலையும் ,இடுப்போடு கால்களும் உள்ளதாக. நான் எங்களது பங்கரில் போட்டு மூடச்ச்சொன்னேன்.   இல்லை தங்களது தங்கையிற்கு காட்டவேண்டும் என்று நிலத்தில் படாமல் தூக்கியபடியே போனார்கள். நாங்கள் சர்வசாதாரணமாக எங்களின் கடமையில் மூழ்கியிருந்தோம்.    



Share/Save/Bookmark

திங்கள், 10 அக்டோபர், 2016

போராடு! உழைப்பிற்கு ஊதியம்

உடன்பிறப்புகளே!
தோள்கொடுக்க முடியவில்லை
எம் தார்மீக ஆதரவு உங்களுக்குள்
யாரும் உங்களுக்காய் இல்லை
ஏணியாய் வாழ்ந்தது போதும்
சோராது பயணியுங்கள்
கூடவரமுடியவில்லை
மலையில் இறங்கும் அருவியில்
மாரியம்மன் பஜனையில்
சிலிர்த்து உரசும் காற்றில்
நாம் இருப்போம் உயிராக  
அன்புடன்


Share/Save/Bookmark

வெள்ளி, 7 அக்டோபர், 2016

இலங்கையில் தமிழ் அழியாது

இலங்கையில் தமிழர் என அடையாளப்படுத்துவோர், சிங்களவர் என அடையாளப்படுத்துவோர்,முஸ்லீம்கள் என அடையாளப்படுத்துவோர் வாழ்கின்றனர். காலப்போக்கில்   தமிழர் என அடையாளப்படுத்துவோர் தமது அடையாளங்களை  இழந்துபோனாலும் இலங்கையில் தமிழ் அழியாது தமிழ் பேசும் முஸ்லீம்கள் அதை வளர்த்துச்செல்வர் .தற்போது இலங்கையில் 30 % தமிழ் பேசுகிறார்கள் இன்னும் நூறு வருடத்தில் 45% தமிழ் பேசுவார்கள்.இன்னும் நூறு வருடத்தில்புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தில் அரைவாசியாவது --? 



Share/Save/Bookmark
Bookmark and Share