வெள்ளி, 30 டிசம்பர், 2016

நம்பிக்கை

வருடம் கழியும் வெறுமையில்
வருடம்பிறக்கும் வறுமையில்
ஒரு வருடம் கூடுகிறது
இறுதிவார்த்தை பகிர்ந்து ,
காணாமல் போய்,சிறைக்குள்
புதுவருடம்
வழமைபோல் உலகதிருவிழா
போரில்உ லகிடம் தோற்றோம்
நிலத்திலும் புலத்திலும்
நாளும் அடையாளம் இழக்கிறோம்
நாளாந்தவாழ்வில் எதிர்காலத்தை
புதைக்கிறோம் - இருந்தும்
நம்பிக்கையை விதைக்கிறோம்
"நவீன உலகில்
எதுவும் சாத்தியமாகலாம் "


வருடம் கழிகிறது
பல கனவுகளை மீள நினைக்கிறேன்
2000  இல் கிளிநகரின் திட்டமிடலில் ஒருவன்
அறிவியல் நகரில் ஆயிரம் கனவுகள்
முருகண்டியில் எழுபது ஏக்கரில் மைதானம்
இரணைமடுவில் "தாயகம்" மருத்துவமனை
அதன் பணிப்பாளராக நியமனம் (2004 )
கிளிமருத்துவமனை முன் மருத்துவ ,உணவு ஆய்வுகூடம் (2008 )
மாங்குளத்தில் பெருநகர் திட்டமிடல்
தமிழீழத்தின் சுகாதாரதிட்டமிடல் (2007 )
இன்னும் இன்னும் பல கனவுகள்  
கருவில் கலைந்தநினைவுகள்        
Share/Save/Bookmark

சனி, 10 டிசம்பர், 2016Share/Save/Bookmark

சனி, 3 டிசம்பர், 2016

என் மரியாதை எப்போதும்

பிடல்
ஒரு காலத்தில்
எங்களுக்குள் புதுந்துகொண்டவன்
கியூபாவிற்காக மட்டும் வாழ்ந்தவன்
சே அப்படியல்ல
அவன் மக்கள் விடுதலைக்காய் பிறந்தவன்
பிடல்
அதிபராக இருக்கும்போதும்
கரும்புத் தோட்டத்திலும் வேலை செய்தவன்
சே
பதவி வேண்டாம் என்று
பொலிவியாவின் மலையொன்றில்
வீரச்சாவு அடைந்தவன்
பிடல்
பெண்பொறுக்கிதான்வென்றதால் போற்றப்படுகிறான்
ஈழத்தமிழனின் குருதியை
ஐ நாவில் கூட தண்ணீராய் பார்த்தவன்
கியூபாவின் விடுதலைப்போர்
ஈழப்போரின் கனதியில் ஒரு தூசு
இருந்தும்
அமெரிக்காவிற்கு சவாலாகவே இருந்தான்
அந்த வீரத்திற்கு
ஒரு மதிப்பை விரிக்கிறேன்
என் மரியாதை எப்போதும் என்னவனுக்குத்தான்

     
Share/Save/Bookmark