செவ்வாய், 4 மே, 2010

சுதந்திரம் மீள வருமா?

பூர்வீக மண்ணில
சொந்த உழைப்பில
கட்டின வீட்டில
மீள் குடியேற்றமாம்.



கதவு,கதவு நிலை
யன்னல்,யன்னல் நிலை,சீட்
ஒன்று விடாமல் வறுகல்
தவிச்ச முயல் அடிக்கும் சிங்களம்.

பாலர் புத்தகங்களைக் கூட
எரித்து முடித்தது சிங்களம்
மிகுதி எதுவுமில்லை
தமிழரின் சறுக்குமர வாழ்வு
எத்தனை காலத்திற்கு?

குடி அகற்றுவர் ,சூறையாடுவர்,
சுடலையாக்குவர் -பின்
உலகிற்கு மீள் குடியேற்றமாம் .
உலகநிதியை சுருட்டி
ஒருதுளியை தெளிப்பார்
யார் உளார் கேட்க --

கிழக்கில் மட்டும்
ஐம்பதினாயிரம் விதவைகள்.
இருந்ததெல்லாம் துடைத்தெடுத்தார்
கண்ணீரை மட்டும் துடைக்க யாருமில்லை.
போவது தான் போகட்டும்
சுதந்திரம் மீள வருமா?

எம் பூர்வீக மண்ணில
நாளுக்கு நாள்
சிங்களக் குடியேற்றம் .
கோவில் இல்லை
வீடுவாசல் இல்லை.-எங்கும்
புதிது புதிதாய் சிங்களச் சின்னங்கள்.

தமிழரை அழிக்க
சிங்களம் கட்சி பேதமற்று ,
தமிழரோ சிதறியும் ,
சுய நலத்திட்குள் சுருங்கியும்--

அழிதல்
எப்படியோ சாத்தியமாகப் போகிறது.
அடிமையாகவோ
அடிபட்டோ அழிதல் என்பதை
தீர்மானித்தலே நலம்
அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரலாம்.

யாவரும் மனிதரே
யாவரும் நலமாய் வாழ
அவர் சுதந்திரத்தை
அவர் அனுபவிக்க
அனுமதி இல்லையா?

நிலமுடைத்து வரும் முளைபோல
விடுதலை வருமா?
இரவு விடியாமலே போகுமா?
முயற்சி உடையார் மட்டும்
இகழ்ச்சி அடையார்.

-சுருதி-

        




  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share