சனி, 5 ஜூன், 2010

தமிழ் திரையுலகிற்கு நன்றி.

பூவரசம்/கிழுவை
இலை கிடைத்திருந்தாலும்
அமிர்தமாய் இருந்திருக்கும்
பச்சை எதுவும் இல்லை
நல்ல காலம்
ஆடு மாடுகளும் இல்லாதது.
அன்று
எங்களது வாழ்வு அப்படி இருந்தது.இன்று-அது வெற்றிவிழா
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்
வண்ணமாய் மின்னுகிறீர்கள்.
இளைப்பாற குடிசையுமற்று
சுடலையாய் தவிக்கிறோம் நாம்.

இறந்தவர் எலும்புகளை
மட்டையாக்கி,
தலைகளை பந்தாக்கி
ஒய்யார கிரிக்கெட்டும்.
பறவைகளின் செட்டைகளை
முறித்து,விசிரியாக்கிவிட்டு
பறவைகள் பறக்க கிரிக்கெட்டாம்.
ஆகா------

மனித இரத்தவாடைக்கு
சென்ட் தூவுகிறது இந்தி.
சிங்களத்தை குசிப்படுத்த
இந்தி இழக்கிறது கற்பை.

தமிழ் திரையுலகிற்கு நன்றி.
உறவுகளுக்கு
நன்றி சொல்வது நன்றன்று.
இருந்தும்
சொல்லாமல்விட முடியல.
உங்களோடு
திரையோடு முடியா வாழ்வு நீள்கிறது.

நாம் தமிழர் நாம்தமிழர் தான் .

ஒருநாள்
உலகமெங்கும் தமிழன்
ஒருகொடியின் கீழ் வருவான்.

எங்கோ மூலையிலிருந்து
உண்மை
இரகசியமாய் புன்னகைக்கிறது.

    -சுருதி-


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக