சனி, 28 ஏப்ரல், 2012

எங்கள் ஒப்பற்ற தலைவன்

தலைவர் பிரபாகரன் நடைமுறை சாத்தியமான ஒரு உண்மை மனிதன் .அவரைப்பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும் இல்லைத்தான் இருந்தும் 
அவரை வேண்டுமென்றே பிழையாக எழுதுபவர்க்காய் இதை பகிர 
வேண்டியிருக்கிறது.
 தலைவர் இன மத மொழி சாதி பேதம் அற்றவர் .(அவர் நம்பியிருந்த பொறுப்பாளர்களை 
எடுத்துக்கொள்ளுங்கள் .அரசியல் துறைப்பொறுப்பாளரின்    
துணைவியார் சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் 
ஆலோசகரின் துணைவி அவுஸ்த்ரேலியா நாட்டைச்சேர்ந்தவர் 
சர்வதேச பொறுப்பாளரின் துணைவி தாய்லாந்து நாட்டைச்சேர்ந்தவர்) .
அவர் நட்பிற்கு வரைவிலக்கணம்.விடுதலையில் விடாக்கொண்டர்.
மாவீரரை சதா நினைத்து வாழ்ந்தவர்.காலம் காலமாய் போராட்டத்தை 
விடும்படியும் பெரும்தொகை பணம் தருவதாயும் விடுதலை விலை 
பேசப்பட என்றும் விடுதலையை விற்காதவர்.மது,மாது ,சுகபோகவாழ்வு எந்த 
பலவீனங்களும் அற்றவர்.எப்போதும் மாற்றாய் இரண்டோ/ மூன்றோ 
உடைகளே அவரிடம் இருக்கும்.அவருக்கென்று யாரும் கொடுக்கும் 
பொருட்களை " இது இவனுக்கு நல்லா இருக்கும்இது  அவனுக்கு நல்லா இருக்கும் " என்று பகிர்ந்து 
கொடுத்து விடுவார்.எந்த கணமும் சாக தயாராய் இருந்த தலைவன் . 
தங்குமிடத்தில் யாராவது ஒரு போராளி
நோய்வாய்ப்பட்டாலும் அதை அறிந்து அடிக்கடி 
அவனைப்பற்றி கேட்டபடியே இருப்பார்.தான் சாப்பிட முதல் 
அவன் சாப்பிட்டானா?என்ன சாப்பிட்டான்?எவ்வளவு 
வேலைக்குள்ளும் இது குறையாது.அநேக கரும்புலிகள் 
கூட இவன் அருகில் இருந்துதான் சென்றிருக்கிறார்கள்.
எப்போதும் துப்பரவு,ஒழுங்கிற்கு முக்கியத்துவம் 
கொடுப்பவர்.இவரது கண் உருட்டலில் ,கண் சிவத்தலில் ,
புன்னகையில் ,முகமாற்றத்தில் இவர் உள் நினைப்பதை 
ஓரளவு புரிந்துகொள்ளலாம்.எப்போதும் ஏழைகளிலும் ,
அநாதைகளிலும் அதிக கரிசனை கொண்டவர்.    
இது சமாதானக்காலம் . சரணடைந்திருந்த /பிடிபட்ட
சிறிலங்கா இராணுவத்தினரை பார்க்க அவரது உறவினர்கள் 
வந்து போய்க்கொண்டிருந்தார்கள் . அவர்களை பார்க்க வந்த 
ஒரு சிறுமி தலைவரிடம் கொடுக்குமாறு கடிதத்துண்டு 
கொடுத்துவிட்டிருந்தாள்.அக்கடிதம் சிங்களத்தில் 
எழுதப்பட்டிருந்தது.என்ன எழுதிக்கிடக்குது?தலைவர் 
கேட்டார்.
அந்த சிறுமி எழுதி இருந்தாள்.தனது தந்தையை விடும்படியும் 
தான் அவரை சண்டைக்கு விட மாட்டேன் என்றும்.தலைவரின் 
கண்கள் ஒருமுறை சுழன்றது .இப்ப அந்த பஸ் வெளிக்கிட்டிருக்குமா?
இல்லை.வவுனியா பாதை எத்தனை மணிக்கு மூடுறது?
தன்னோடு நிற்கும் போராளி ஒருவரை அழைத்து ,நீர் போய்
அந்த பிள்ளையின் கையில அந்த தகப்பனை ஒப்படையும்.
போராளியின் மோட்டார் சைக்கிள் புறப்பட்டது.எனக்கு 
ஆச்சரியமாக இருந்தது .அந்த இராணுவ வீரன் எப்படிப்பட்டவன் 
என்று அவர் கேட்கவே இல்லை.நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கும் 
போதே சில மணித்தியாலங்களில் அந்த போராளி திரும்பி 
வந்தான்.சிறுமியின் நன்றிக்கடிதத்துடனும்,ஒப்படைத்தபோது 
எடுக்கப்பட்ட புகைப்படத்துடனும். 
2008 காலப்பகுதியில் ஒரு நாள் தலைவரின் தந்தையார்
என்னிடம் வந்திருந்தார்.ஒரு அதிசயம் நடந்ததை சொன்னார்.
தலைவர் அவர்கள் ஒரு நாள் வீட்டுக்கு போயிருக்கிறார்.
வீட்டில் சொல்லி இருக்கிறார்கள் இன்று தகப்பனாரின் 
பிறந்த நாளென்று.தலைவர் கேக் இருக்கா என்று 
வீட்டில் கேட்க எல்லா இடமும் தேடி ஒரு சிறுதுண்டு 
கேக் கிடைத்திருக்கிறது.தலைவர் அதை தூக்கிக்கொண்டு 
தகப்பன் தங்கியிருந்த அறைக்கு சென்றிருக்கிறார்.ஐயா 
இன்றைக்கு உங்கட பிறந்த நாளாம்.கேக்கை ஊட்டிவிட்டிருக்கிறார்.
தகப்பன் சொன்னார் வாழ்க்கையில இதுதான் முதல் தடவை என்று. 
தலைவரின் வீட்டுப்பெயர் துரை.
தகப்பன் சொல்லுவார் எழுபதுகளில ஒரு நாள் 
தான் துரையிட்ட சொன்னன் நீ வீட்டை வராத 
ஏனென்றால் உன்னைத்தேடி போலிஸ் வருகிது
உன்னால மற்ற ஆக்களுக்கு பிரச்சனை .தலைவர் 
அதற்கு பிறகு ஒரு நாளும் அந்த வீட்டுக்கு வரயில்லை .
பெற்றவளுக்கு சரியான கவலை.
தகப்பனார் மிகவும் நேர்மையானவர் கடவுள் பக்தி 
நிரம்பியவர் .  
தலைவர் சொல்லுவார் எங்களுடைய தேசத்தை
மீட்கோணும் ஆனால் எந்த காரணம் கொண்டும் 
சிங்கள மக்களுக்குரிய ஒரு இஞ்சிக் காணியைக்கூட  
நாங்கள் பிடிக்கக்கூடாது.முஸ்லீம் மக்கள் பிரிந்து 
வாழ விரும்பினால் அவர்களுக்கு ஒரு பகுதியை 
பிரிச்சுக்கொடுக்கோணும்.எல்லோரும் 
சுதந்திரமாய் வாழவேனும் என்பதில் உறுதியாய் 
இருந்தார்.மலையகமக்கள் மீது எப்போதும் 
அனுதாபமாய் இருந்தார்.அவர்கள் விரும்பின் 
வன்னியில் குடியேற வசதி செய்துகொடுக்க வேண்டும் 
என்ற எண்ணத்தில் இருந்தார்.     
மரக்கட்டிலில் பாய் விரித்து தலையணை அற்று
ஒரு நாளில் மூன்று மணி நேரம் உறங்கி எழுந்து 
விடுதலை என்ற குறிக்கோளிலேயே கண்ணாய்  
இருந்தார் எங்கள் தலைவர்.
இறுதியில் போர் உச்சமான நிலையில்
ஆளணி போதாமை பெரும் பிரச்சினையாயிற்று.
காயமடையும் மக்களுக்கான மருத்துவ சிகிச்சையை 
விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவே தொண்ணூறு 
விகிதத்திற்கும் அதிகமாய் செய்தது.எந்த வேளையிலும் 
மக்களின் நலன் கருதி அந்த போராளிகளை களமுனைக்கு 
எடுக்கவில்லை.தன்னிடமிருந்த போராளிகளைக்கொண்டு 
ஆயிரம் சிறுகிணறுகளையும் ,மலசல கூடங்களையும் 
மாத்தளன் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் செய்து 
கொடுத்தார்.இறுதி நாட்களில் போராளிகளின் உணவை 
பிரித்து மக்களுக்கு கொடுக்க உத்தரவிட்டார்.
தம் மக்களில் அளவுகடந்த  அக்கறையை/பாசத்தை  
வைத்திருந்த மனித புனிதன் ஒரு தலை சிறந்த வீரன் .

                                                                -நிரோன்-Share/Save/Bookmark

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒரு உண்ணத வீர தலைவன் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்ற பெருமையுடன் கர்வத்துடன் தலை நிமிர்கின்றோம்.

krishy சொன்னது…

அருமையான பதிவு

மே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

கருத்துரையிடுக