திங்கள், 2 ஏப்ரல், 2012

நன்கு பழகிய மனிதரில் எண்பது வீதம் மனிதர் இறந்துவிட்டனர்.

அவனது சின்ன வயது வாழ்க்கை என்ன அழகானது.பிற்காலம் இவ்வளவு
கடினமாய் இருக்கும் என்று அப்போது அவன் துளியும் எண்ணியதில்லை.
பாடசாலை வாழ்க்கையுடன் இனவிடுதலையின் அவசியமும்
பொறுப்பும் நெருப்பாய் பற்றிக்கொண்டது.மூதாதையர்கள்
விடுதலையை பெற்றுத்தந்திருந்தால் அவனினதும் அவன்
போன்றவரின் வாழ்வும் இனிமையாய் தொடர்ந்திருக்கும்.
இயக்க வாழ்வு மிகக்கடினமானது.ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு
நாளும் பல மைல் சைக்கிள் அடித்து கடமை செய்ய வேண்டி
இருந்தது.பின் இரவு பகல் நித்திரை துறந்து உழைக்க வேண்டி இருந்தது.
களமுனை அருகில் கடமையில் மயிரிழையில் பல தடவை
உயிர் தப்பினான்.கடின இராணுவ பயிற்சிகளை மீண்டும்
மீண்டும் எடுக்கவேண்டியிருந்தது.இயக்க வாழ்க்கையில்
அநேக காலங்கள் பொறுப்புகளை எடுத்து அதை சீராய்
முடிக்கவேண்டியிருந்தது.பொறுப்பு உடனான கடமை என்பது மிகவும் மன அழுத்தத்திட்குரியது.மாத்தையா,கருணா எதிர் 
நடவடிக்கைகளுக்கும் அவனுக்குரிய கடமை கொடுக்கப்பட்டிருந்தது.
தமீழத்தின் எல்லா பகுதிகளுக்கும் அவன் சென்றுவந்திருந்தான்.
நெடுந்தீவு தொடக்கம் அம்பாறை வரை அவன் தனது கடமையை 
சிறிதளவாவது செய்திருந்தான்.இன்று அவனது சுவாசப்பையில் 
புழுதி மண் சுவாசம் மூலம் வந்து படிந்து கிடக்கிறது.சுவாசம் 
கடினமாய் இருந்தாலும் உடலில் தான் நேசித்த மண் சேர்ந்திருப்பது 
சிறு சந்தோசத்தை கொடுக்கிறது.கண் மங்குகிறது.முன்பு நித்திரை கொள்ள நேரம் இருக்கவில்லை இப்போது நேரம் இருந்தும் நித்திரை வருகுதில்லை.நாரி நோவால் சில மணிநேரம் இருக்கவும் முடியவில்லை. மனம் இன்னும் இருவது வயது கூடியதாய் சலித்துவிட்டது.இயக்கத்தை தவிர ஏதும் தெரியாது 
வாழ்ந்ததால் அவனது உறவினர்கள் இப்போதும் கதைப்பதில்லை.
போராட்டத்திற்கு என்றும் ஒரு சிறு தீங்கும் செய்யவில்லை என்ற 
உணர்வு அவனிடம் மிஞ்சிக்கிடக்கிறது.நன்கு பழகிய மனிதரில் எண்பது 
வீதம் மனிதர் இறந்துவிட்டனர்.நாட்கள் சுமையாக எஞ்சிய நாட்களை 
கடந்து முடிக்கவேண்டி இருக்கிறது.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share