வியாழன், 16 ஆகஸ்ட், 2012

சிறுவர் ஆக்கங்கள்


1,


பூனையார் பூனையார் 
எலி பிடிக்கும் பூனையார் 
பதுங்கிப்பதுங்கி 
எலி பிடிக்கும் பூனையார் 


எலிகள் எல்லாம் சேர்ந்தன 
திட்டம் ஒன்று போட்டன 
பூனையார் கழுத்தில் மணிகட்டினால்
பூனை வரும் சத்தத்தில் 
ஓடி நாங்கள் தப்பலாம் 
திட்டம் நல்ல திட்டம் 
எலியாருக்கு கொண்டாட்டம் 

யார் பூனைக்கு மணிகட்டுவது?
எலியாருக்குள் திண்டாட்டம்  
யார் பூனைக்கு மணிகட்டுவது?
எலியாருக்குள் திண்டாட்டம்  

பூனையார் பூனையார் 
பதுங்கித்திரியும் பூனையார் 
எலியாரின் திட்டம் கேட்டு 
கொடுப்புக்குள் சிரித்துக்கொண்ட
பூனையார் 
பகிடி பார்க்க மீயா மீயா 
சத்தம் போட்ட  பூனையார்
எலியாரின் கூட்டமும் போச்சு 
அவர் போட்ட திட்டமும் போச்சு
 ஓடி ஒளித்தனர் எலியார்

பூனையார் பூனையார் 
கொடுப்புக்குள் சிரித்துக்கொண்ட
பூனையார் 

2,

அம்மம்மா அம்மம்மா 
எங்கள் உயிர் அம்மம்மா 
நித்தம் புத்தம் புது கதைகள் 
சொல்லும் அம்மம்மா 
வார்த்தைஜாலம் கோர்த்து 
வண்ண வண்ண கதைகள் 
சொல்லும் அம்மம்மா 
நிலாக்காட்டி சோறு ஊட்டி 
எம் சின்ன வயிறு நிரப்பும் 
அம்மம்மா 
எம் ஆசை அம்மம்மா 
எம் அம்மாவோடு கூடயிருந்து 
எம்மை வளர்த்த அம்மம்மா 

எம்மை யாரும் உறுக்கிவந்தால் 
அடைக்கலம் தரும் அம்மம்மா
அன்பாக அரவணைத்து 
,ஆவன்னா சொல்லித்தரும் 
அம்மம்மா 
கடைக்கு கூட்டிப்போய் 
கலர் கலராய் 
மிட்டாய் வாங்கித்தரும் 
அம்மம்மா 
சட்டி மீது சட்டி வைத்து 
அப்பம் சுட்டுத்தரும் 
அம்மம்மா 
நாம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க 
பார்த்து மகிழ்ந்த அம்மம்மா 
பட்டம் போல் நாம் பறக்க 
நூலாய் இருந்த அம்மம்மா    


3,

மயிலே மயிலே ஆடிவா 
மழை வரப்போகுது ஆடிவா 
தோகை விரித்தபடி ஆடிவா   
முடிந்தால் முருகனையும் ஏற்றிவா 

கிளியே கிளியே பறந்துவா 
கொந்தல் பழங்கள் நான்தருவேன் 
கொண்டைக்கிளியே பறந்துவா 
கீ கீ என்றே பறந்துவா 

குயிலே குயிலே பாடிவா 
தேனிசையாய் பாடிவா 
மயிலார் உண்டு நடனமாட 
 குயிலே குயிலே பாடிவா  

புறாவே புறாவே இறங்கிவா 
கரணம் அடித்து இறங்கிவா 
தானியம் நிறைய நான் தருவேன் 
தகவல் ஒன்று சொல்லிவிடு 
அம்மம்மாவிடம் 
தகவல் ஒன்று சொல்லிவிடு 4,
பள்ளி செல்லும் சிறுவர் நாம் 
கருத்தாய் கல்வி கற்றிடுவோம்  
சீரும் சிறப்பும் நாம் பெற்று 
நாடு செழிக்க உழைத்திடுவோம் 

பாரில் நிறைய விடயமுண்டு 
 பகுத்து அறிய பள்ளி செல்வோம் 
 சிறுவர் நாம் பள்ளி செல்வோம் 
துள்ளித்துள்ளிபள்ளி செல்வோம் 

உடலும் உளமும் வளரவே 
ஓடி ஆடி விளையாடுவோம் 
பள்ளித்தோழர் கூடவே 
ஆடிப்பாடி விளையாடுவோம் 

பள்ளிக்கூடம் 
அது கல்வித்தேட்டம் 
பயன்தரு பலன்கள் 
 அள்ளித்தரும் தோட்டம்  


5,
மழையே மழையே 
வா வா வா 
குளிர்மை நிறைய 
தா தா தா 

மின்னலாய் புன்னகைக்கும் 
மழையே மழையே 
வா வா வா 

இடியாய் இடித்து உறுமி 
மழையே மழையே 
வா வா வா 

மாரி மழையைப்பார்த்து 
தவளையார் இருப்பார் 
வா வா வா
மழையே மழையே 
வா வா வா 

தோகைவிரித்து மயிலார் ஆடுவார் 
மழையே மழையே 
வா வா வா 

மெதுவாய் மெதுவாய் 
பெய் மழையே
ஏழைக்குடிசை  மீது 
மெதுவாய் பெய் மழையே  
மழையே மழையே 
வா வா வா 


6,
ன்னை ஓர் 
லயம் 
ல்லாதவருக்கு உதவு 
யையும் கொல்லாதே 
ண்மையே பேசு 
ரோடு சேர்ந்திரு 
ண்ணத்தில் தூய்மையாய் இரு 
ணியாய் வாழ் 
யம் தீர கல் 
ழுக்கமே உயர்வு 
ரணியில் நில் 
வையின் ஆயுள் பெறு                                         
றினையையும் மதி 

Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக