வியாழன், 9 நவம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன்

ஆனந்தபுரத்தில் தலைவர் இருக்கிறார்( பங்குனி பிற்பகுதி  2009). உண்மையிலேயே இறுதி சண்டை இங்குதான் திட்டமிடப்பட்டிருக்கக்கூடும். மக்களின் இழப்பை குறைக்க எண்ணியிருக்கவேண்டும். எனக்கு அறிவிக்கப்படுகிறது  அண்ணை வரமாட்டன் என்று நிற்குது. ஆனந்தபுரத்திற்குள் சத்திரசிகிச்சை கூடம் அவசரமாய் போடவேண்டும். உண்மையிலேயே எங்களது சத்திரசிகிச்சை கூடங்கள் முழு மூச்சுடன் எமது சகல வளங்களையும் பாவித்து இயங்கிக்கொண்டிருக்கிறது. எந்த சத்திரசிகிச்சை கூடத்தின் வினைத்திறனையும் பாதிக்காமல் ஆளணி ,உபகரணங்களை ஒழுங்கு செய்யவேண்டும் . நான் சுதர்சனையும் கமலையும் மட்டும் என்னுடன் கூட்டிப் போக ஒழுங்குபடுத்தினேன். மிகுதியை ஆனந்தபுரத்தில் உள்ள மருத்துவ வளத்தை பயன்படுத்த முடிவெடுத்தேன் .  தளபதி பானு இடத்தினை ஒழுங்கு செய்திருந்தார். இரவு 11 மணிக்கு செல்ல ஆயத்தமாக இருந்தோம். இரவு 3  மணிக்கு தகவல் கிடைத்தது தலைவர் வந்திட்டார். ஆனந்தபுரத்தில் நின்ற தளபதிகள்  தலைவரை ஆனந்தபுரத்தைவிட்டு செல்லுமாறு கெஞ்சி அனுப்பிவிட்டதாய் சொல்லப்பட்டது.  எங்களது பயணமும் இரத்துசெய்யப்பட்டது. தலைவர் எப்போதும் பல எண்ணங்களுடன் இருப்பார். அதற்காய் ஒரு சத்திரசிகிச்சை அணியை இறுதிவரை மனதிற்குள் ஆயத்த நிலையிலேயே வைத்திருந்தேன்.   வருமுன்காப்பு நடவடிக்கையை முன்னெடுக்க லோலோவிற்கு தினமும் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தேன். வருமுன்காப்பு நடவடிக்கையில்  நான் எப்போதும் அதிககரிசனையில் இருந்தேன்.    



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share