ஞாயிறு, 16 ஜூன், 2024
மீண்டும் தொடங்கும் மிடுக்கு
தேர்ந்த நூல்களை சேகரித்தல்
தித்திப்பு
ஓய்வில் தேர்ந்து வாசித்தல்
தென்றல் முத்தமிடும் தருணங்கள்
அனுபவங்கள் தித்திப்பானவை
சேகரிப்புகளை இழத்தல்
கொடியது
உறவுகளை இழப்பதுபோல
மீண்டும் மீண்டும் இழத்தல்
இதயத்தில் குதியிருக்கும் ஆணிகள்
வசந்தத்தை இழந்தாலும்
மீண்டும் தொடங்கும் மிடுக்கு
தூர தேசத்தில்
துக்கம் தீரா கவலை
துருத்திக்கொண்டிருக்கிறது
தோளில் தூக்கி போகமுடியா கடமை
எந்தப்பணியும் செய்யா பிணி
என்னைத்தொடர்கிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக