சனி, 17 மே, 2025

எதுவும் சொல்வதற்கில்லை

கடல் வற்றிற்று மூச்சுகள் நின்றன யாருமில்லை ஓலமில்லை வெந்த பூமியை கழுகுகள் தின்றன உம் நினைவோடிருப்போம் நினைவிழக்கும்வரை கனவை சுமக்காத வலியால் நிதம் உழன்றுகொண்டிருக்கிறது உயிர் எதுவும் சொல்வதற்கில்லை மனம் தவித்துக்கொண்டிருக்கிறது சாத்தியமேயில்லாத இன்னொரு சந்திப்புக்காய்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share