வெள்ளி, 26 டிசம்பர், 2025
நான் வாழ்ந்த சூழல் எனக்கு கலைத்துவமான பரிச்சியத்தை தந்தது உண்மைதான் இருந்தாலும் எழுபதுகளில் சுதந்திரன்
வாரப்பத்திரிகையின் தாக்கமும் எனக்குள் ஒரு இலக்கிய தாகத்தையும் உருவாக்கியது.1977 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் என்ற பெயரில் இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜகம் எனக்குள்ளும் தாக்கத்தை செலுத்தியது. அப்பொழுது "வேதனை சோதனை சாதனை" என்ற தலையங்கத்தில் ஒரு நீள் கட்டுரையை எழுதினேன். அது பாடசாலையிலும் வெளியிலும் ஒரு சுற்றுவட்ட வாசிப்பிற்கு வரவேற்புடன் போய்வந்து. பின்பு இப்படி கட்டுரைகளை இடைக்கிடை எழுதுவது என்னை சமநிலைப்பத்தியது ஆனால் இவை அச்சாகியிருக்கவில்லை. என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. "ஓ எங்கள் அருணன் " என்ற கட்டுரை திலீபனுக்கு பிடித்திருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக