திங்கள், 15 ஜூன், 2026

எழுத்தாளர் சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின் சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் (வெள்ளிநாதம் ) பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40 கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது.நிகழ்வுகளிலும் கவிதை வாசித்திருக்கிறார். முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படங்களுக்காக, சிறுகதைகளுக்காக ஐம்பதிற்கும் மேற்பட்ட வெற்றியாளர் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார். இவரது முப்பது விஞ்ஞானக்கட்டுரைகள் போர்க்காலத்தில் கிளிநொச்சியில் வெளியான "விழி " மருத்துவ இதழ்களில் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய "கைவிளக்கு" என்ற சிறுவர் நூல் 2010 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. கொரோனா காலத்தையொட்டி "ஜீவநதி" இதழ் அகில உலக ரீதியாக நடாத்திய கவிதை போட்டியில் தெரிவான கவிதைகளின் கவிதைத்தொகுதியிலும் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. " தடாகம்" அமைப்பு 2018 ஆம் ஆண் டு உலகம் தழுவிய ரீதியில் 2018 ஆம் ஆண்டு நடாத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று "கவின்கலை" பட்டத்தையும் பெற்றார். பாடசாலை வாத்திய அணியில் melodica வாத்தியத்தை வாசிப்பவராக இருந்திருக்கிறார்.1998 ஆம் ஆண்டு கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் "வளர்பிறை" கையெழுத்துச் சஞ்சிகை வடகிழக்கு மாகாணத்தில் பாடசாலை சஞ்சிகைகளுக்கான பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றது, இவர் அச்சஞ்சிகையின் ஆசிரிய ஆலோசகருக்கான சான்றிதழை கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றார்.இவர் ஒளிப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வமுள்ளவர். svartsol12.blogspot.com என்ற வலையிணையத்தில் நோர்வேஜிய மொழியிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த பின் தமிழ்பாடசாலையொன்றின் ஆசிரியர்களில் ஒருவராக கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருகிறார்.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share