![Share/Save/Bookmark](http://static.addtoany.com/buttons/share_save_171_16.png)
வியாழன், 1 ஆகஸ்ட், 2024
நான் சிறுவனாக இருந்தபோது என் கிராமத்தில் ஒருவரிடமும்
மோட்டார்சைக்கிள் இருக்கவில்லை, வீட்டுக்கொரு சைக்கிள் இருந்தது. கிராமத்தில் ஒருவரிடம் கார் இருந்தது, அந்தக்காரினை மற்றையவர்கள் நல்லது கேட்டதிற்கு வாடகையிற்கு அமர்த்துவார்கள். அப்போதெல்லாம் அவச்சாவுகளை நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
என் கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, தொலைகாட்சி பெட்டியில்லை ஆனாலும் கிராமம் வயல்களோடு செழித்திருந்தது. கோயில்கள், விளையாட்டு மைதானங்கள், சனசமூகநிலையங்கள் எங்களை மகிழ்வூட்டின.ஒவ்வொரு வீடுகளிலும் ஆடு மாடு கோழிகள் இருந்தன. கிருமிநாசினி பாவிக்காத காய்கறிகள் , பழங்கள் இருந்தன. நாட்டுக்கோழிதான், புரொய்லர் கோழி இருக்கவில்லை. சலரோகம், பிரஷர் , கான்சர் கேள்விப்பட்டதில்லை.
![Share/Save/Bookmark](http://static.addtoany.com/buttons/share_save_171_16.png)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக