திங்கள், 26 அக்டோபர், 2026

எழுத்தாளர் மலரன்னை அவர்கள்

எழுத்தாளர் மலரன்னை அவர்கள் எழுதிய 275 ற்கும் மேற்பட்ட சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகியிருக்கிறது. இதில் முற்பத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் திறந்த போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. அதில் இருதடவைகள் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. இதுவரை 11 சிறுகதைத்தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன , இவற்றுள் 217 சிறுகதைகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் மலரன்னை அவர்கள் எழுதிய 40 ற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் பெருவரவேற்புடன் ஒலிபரப்பாகியிருக்கிறது.இதில் பத்திற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் திறந்த போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. அதில் இருதடவைகள் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. இதைவிட 43 அங்கங்களை கொண்ட " கனவுகள் நனவாகும் " என்ற ஒரு தொடர்நாடகமும் வானொலியில் ஒலிபரப்பாகி பெருவரவேற்பு பெற்றிருக்கிறது. இவர் எழுதிய முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வரலாறுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகள் தாயக வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது. மலரன்னை அவர்கள் தனது 10 -12 வயதுகளில் தையலில் ஈடுபடத்தொடங்கினார்.அவர் தனது தாயாரிடமிருந்தே தையல், பின்னல் கலைகளை கற்றுக்கொண்டார். அவரது வாழ்நாள் காலத்தில் அவர் தைத்தது ஏராளம். இப்போது தையல் இயந்திரத்தின் உதவியுடன் அவரால் தைக்கமுடியாது எனினும் தையலை தனது 82 ஆவது வயதிலும் கை தையலில் செய்து கொண்டிருக்கிறார் . தையல் கலையில் அவர் அசாத்தியமானவர்.


Share/Save/Bookmark

சனி, 3 அக்டோபர், 2026

வீழ்ந்து கிடப்பது

நிழல் தந்த மரம் ஒன்றை கெட்டித்தனமாய் வெட்டி வீழ்த்தினான் குருடன் யார் சொல்லும் கேட்கவில்லை செவிடன் நாளை மூச்சுவிட முக்குவான் "மஹாதெனமுத்தா" மூடன் வீழ்ந்து கிடப்பது பசுமை தந்த மரம் மட்டுமல்ல பறவைக்கூடுகள் மட்டுமல்ல பகுத்தறிவும்தான்


Share/Save/Bookmark
Bookmark and Share