ஞாயிறு, 1 நவம்பர், 2026

இருள் இரவில் மட்டுமல்ல

(1)சிறுபுள்ளி இருதிசை பிரிவு நிரந்திரமாயிற்று " வலி " கொதிக்கிறது மனம் அந்த புள்ளியிலேயே குந்தியிருக்கும் (2) அழியா நினைவுகளை பொக்கிசமாய் காவித்திரிபவன் சகாக்களை தொலைத்துவிட்டு பூமிக்கும் வானத்திற்குமிடையில் நடந்து திரிபவன் எழுதிமுடிக்கா கடிதங்களை மகாத்மாக்களுக்கு அனுப்பிவிட்டு பதிலுக்கு முகவரியற்று காத்திருப்பவன் (3) இரண்டாவது வாழ்க்கை இருப்பிற்கும் இழப்பிற்குமான வெளி இன்மையே பேசு பொருளாகிறது இடம்பெயர்வு என்பது இடர்பெயர்வது இல்லை இசையும் ஆறுதல் தருவதில்லை இதயம் இயந்திரமாகிறது இருள் இரவில் மட்டுமல்ல


Share/Save/Bookmark
Bookmark and Share