அது 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் யாழ் நகரெங்கும் மாவீரர் நினைவு
அமைவிடங்கள் அமைக்கப்பட்டன.சிறந்த அமைவிட அமைப்பிற்கு
பரிசு வழங்கப்படும் எனும் கதையும் உலாவிற்று.சங்கரத்தை சந்தியில்
ஓவியன் தலைமையிலான அணி பேருந்துகளின் தகரங்களை
சிரமங்களின் ஊடு கழற்றி, வர்ணம் பூசி, சங்கானையைச் சேர்ந்த
ஓவியர் ஒருவரால் படங்கள் வரையப்பட்டன.படங்கள் அட்டகாசமாக
இருந்தன.படங்களுக்கான விளக்க வரிகளை ஓவியன் தூரிகைகளால்
அழகாக எழுதி இருந்தான்.யாழ்ப்பாணத்தை முழுமையாய் தரிசித்த
பலராலும் இவ் அமைவிடமே சிறப்பானது என்று கூறி பாராட்டப்பட்டது.
1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்
"வேதனை,சோதனை,சாதனை " என்ற தலையங்கத்தில் நீள் அரசியல்
கட்டுரை ஒன்றை ஓவியன் எழுதினான்.இதுவே அவனால் எழுதப்பட்ட
முதல்நீண்ட எழுத்துருவாகும்.அவனது பிரசுரமான முதல் சிறுகதையாக
" கல்லறைக்குள் தீபம் ஓன்று " 1987 ஆம் ஆண்டு உதயனின் சஞ்சீவியில்
பிரசுரமாயிற்று.
சமுதாயத்தில் காணப்படும் பின்னிலைக்கருத்துக்களை
மையமாக வைத்து ஏழு சிறுகதைகளை எழுதி "சமுதாயக்காயங்கள்"
என்ற தலையங்கத்தில் புத்தகமாக வெளியிட முயன்ற போது இந்திய
இராணுவத்தால் எரிக்கப்பட்ட அவனது வீட்டோடு மூலப்பிரதிகளும்
சாம்பலாயிற்று.
ஆங்காங்கே பத்திரிகைகளிலும் ,இதழ்களிலும்
அவனது படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருந்தன.கவிதை,
கட்டுரை,சிறுகதை, ஓவியப்போட்டிகளிலும் பரிசுகள் பெற்றான்.
1999-2008 காலப்பகுதியில் வன்னியில் ஐநூறிட்கு
மேற்பட்ட சுகாதாரக் கண்காட்சிகளை திட்டமிட்டு நெறிப்படுத்தி
நடத்தியதோடு அக்கண்காட்சிகளில் கலைநிகழ்வுகளையும்
நெறிப்படுத்தி நடாத்தி இலச்சத்திட்கு மேற்பட்ட மக்களுக்கு
நேரடிப்பயனை பெற உதவி தனது இலக்கில் குறிப்பிடத்தக்க
வெற்றி பெற்றான்.
வன்னியில் இருந்த ஊடகங்களில் போதிய அளவு செய்தியாளர்கள் இல்லாததால் தாம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் ஈழநாதம் ,புலிகளின்
குரல்,தமீழீழ தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அனுப்பியும்வந்தான்.
ஒலி, ஒளி நாடாக்களை உருவாக்கியதோடு
குறுந்தூர வானொலியை நடாத்துவதிலும் ஓரளவு வெற்றி
பெற்றான்.
"விழி "மாதாந்த மருத்துவ இதழ்,"சுதேச ஒளி"
காலாண்டு இதழ்,ஆகியவற்றின் ஆக்ககர்த்தாவும்,ஆசிரியருமான
அவன் "அக ஒளி"வருட சிறப்புமலர்களின் ஆக்ககர்த்தாவும்,மலர்
ஆலோசகருமாய் கடமை செய்தான்.
போர் உச்சமடைந்த இறுதிக்காலத்திலும்
பதுங்குகுழி அமைத்ததிலிருந்து,சுகாதார தடுப்புகள் பற்றிய
செய்திகளை ,அறிவுறுத்தல்களை சிறு ஒலிபெருக்கிகளோடு கூட
வாகனங்கள் தொடங்கி ஆட்டோ,துவிச்சக்கர வண்டியூடாகவும்
துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் ஊடாகவும் நடாத்தினான்.
ஒலிநாடாக்களில் பதியப்பட்ட செய்திகள் புலிகளின் குரல்
வானொலியிலும் மீள் ஒலிபரப்பாகிகொண்டிருந்தன. செய்திகளை
கால் நடையாய் சென்று பரப்பும் பொறிமுறையைக்கூட அவர்கள்
கச்சிதமாய் செய்தார்கள் .
ஓய்வற்ற உழைப்பினில் இலும் அதற்குள் வாழும்
இறுதிக்காலத்தை எழுத்தில் பதிவு செய்திருந்தான்.2009 வைகாசி
12 ஆம் திகதி இராணுவத்தாக்குதலால்எரிகாயத்திட்கு
உள்ளானதுடன் அவனது எல்லா ஆவணங்களும் மீண்டும்
எரிந்து சாம்பலாயிற்று.உயிர் தப்பும் மிக மிக குறைந்த
வாழ்விற்குள்ளால் உயிர் மட்டும் தப்பியிருந்தது.
ஒரு செய்தியை காத்திரமாக பரப்பிய ,
வெற்றி பெற்ற ஊடகவியலானாய்,தான் சார்ந்த ஊடகங்களை
நடாத்திய பொறுப்பாளனாய் அவன் வாழ்கிறான்.
ஊடகவியலில் பட்டயக்கற்கையை பூர்த்தி செய்த
ஊடகவியலில் பட்டயக்கற்கையை பூர்த்தி செய்த
இவனின் ஏழு நூல்கள் இதுவரை பிரசுரமாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக