புதன், 22 பிப்ரவரி, 2012

சுதந்திரத்திற்கு ஈடு,இணையாய் இவ்வுலகில் ஏதும் இல்லை.

1977 ஆம் ஆண்டுத்தேர்தலில் தமிழீழமே தீர்வு என்று தமிழ்
மக்களால் ஜனநாயகமுறையில் உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டது.
யாருமே ஜனநாயகத்தை பொருட்படுத்தவோ/  மதிக்கவோ இல்லை.
தீர்வும் கிடைக்கவில்லை மாறாய் அப்பாவிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து
விடப்பட்டது.
ஆயுத போராட்டம் தவிர்க்கமுடியாமல் போயிற்று.
                                     மக்களுக்காக மக்களுக்குள் இருந்து போராளிகள்
தோன்றினர்.ஏற்கனவே சிறு இனமாக இருந்த தமிழர்களுக்குள்ளும்
சிறு தொகையினரே முன்வந்து ஆயுத பயிற்சி பெற்று போராளியாயினர்.
இருந்தும் போராட்டம் குறிப்பிடக்கூடிய வெற்றிகளை அவர்
தியாகங்களால் பெற்றது.மிகச் சிறிய அளவு மக்களும் ஆயுத
பயிற்சி பெற்று தமது தேசக்கடமை செய்தனர்.ஒரு பெரு
ஆதிக்க இனத்திட்கெதிராக, அவர் உலக உதவிகளுக்கெதிராக
இறுதிவரை போராடினர் இது வரலாறு.
                                          சில குடும்பங்கள் அதிக பங்களிப்பை
செய்ய பல குடும்பங்கள் குளிர் காய்ந்தன.இதுவும் வரலாறு.
சில குடும்பங்களில் பல போராளிகள் ,பல குடும்பங்களில்
ஒரு போராளி கூட இல்லை.இருந்த போராளிகள் மிக அதிக
சுமையை சுமந்தனர். காயங்களால் அங்கம் இழந்தும் சுமை
தாங்கியாயினர்.சில குடும்பங்கள் முழுமையாய் விடுதலைக்காய்
எதையாவது பங்களித்தனர்.எதிரியால் மட்டுமல்ல சுயநலவாதிகளாலும்
எம் போராட்டம் பின்நகர்த்தப்பட்டது.
                                         விடுதலைக்காய் உழைத்தவர் குடும்பங்கள்
சோகக்கடலுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டன.மதில் மேல்
பூனைகளும்,எட்டப்பர்களும் தியாகங்களை கொச்சப்படுத்துகிறார்கள்.
வரலாறு தேங்குவதில்லை.தர்மம் வெல்லும்.இந்த பூமியில்
எல்லா நிகழ்வுகளும் பதியப்படும்.
                                            அடக்குமுறைக்குள் வாழும் மக்கள்
உடைத்து வாழ / சாகத்தான் விரும்புவர் . சுதந்திரத்திற்கு
ஈடு,இணையாய் இவ்வுலகில் ஏதும் இல்லை.திலீபன்
கனவு எப்போது நனவாகும்?
      


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share