சனி, 11 பிப்ரவரி, 2012

விடுதலைப்புலிகளை குற்றம் சொல்லல் நியாயமா?

                                      விடுதலைப்புலிகள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேறியவரை சுட்டார்கள், ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள்.மக்கள் மீது 
அவர்களுக்கு அக்கறையில்லை என்று அபாண்டமான முழுப்பொய்யை 
உலகம் மீது திணிக்க சிங்கள அரசும்,அவர் கூட்டுகளும் முயல்கின்றன.
                                       உண்மையில் அங்கு என்ன நடந்தது?
                 விடுதலைப்புலிகள் இயன்றவரை போராட்டத்தை தக்கவைக்க 
முழு முயற்சி எடுத்தார்கள்.விடுதலைப்புலிகள் பொதுவில் என்றுமே 
தங்களுக்காய் வாழ்ந்ததில்லை.ஆளணியும்,ஆயுதபலமும் உலக 
சிங்கள கூட்டால் சிதைக்கப்பட்டபோது அதை மீள கட்டி எழுப்ப 
அவர்கள் பட்டபாடு/ உழைப்பை யாரறிவார்?
                                      வீட்டுக்கொருவர் போராட வருமாறு விடுதலைப்புலிகள் 
அழைப்பு விடுத்து அதை செயற்படுத்திய போது அதற்கும் எதிர்ப்பு 
வந்ததுதான்.பலரின் விடுதலை பற்றிய உண்மைமுகம் தமது குடும்பம் என்று வருகையில் வெளியில் 
அலங்கோலமாய் தெரிந்ததும் உண்மை.  இந்த திட்டம் போராட்ட 
காலங்களில் வேறு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான்.இதற்குள் 
பதினாறு வயது நிரம்பியவர்கள் தான் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் . 
மருத்துவரீதியில் பரிசோதித்து தகுந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
                                     இறுதிக்காலத்தில் சிங்களத்தால் வயது வேறுபாடின்றி 
திட்டமிட்டு மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் .யாரும் தப்புவது 
அவர்கள் அதிஷ்டமாகவே இருந்தது.களத்திற்கும், 
வாழ்நிலத்திட்கும் வேறுபாடு இருக்கவில்லை.விடுதலைப்புலிகள் 
வலுவானவர்களை இணையுமாறு அழைப்புவிடுத்து ,பலவந்தமாகவும் 
இணைக்கவேண்டிய நிலையை உலகம் ஏற்படுத்தியது.  பலதளபதிகள்
தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்தார்கள்.அந்தபிள்ளைகளும், 
விழுப்புண் ஏற்றார்கள்,வீரச்சாவு அடைந்தார்கள்.
                                         ஆட்சேர்ப்பில் சிலதவறுகள் நடந்தன.இராணுவ பிரதேசத்திற்குள் சென்ற மக்கள் மீதும் சில சூட்டுச்சம்பவங்கள் நடந்தன.சிங்களமும் 
விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவி இருந்தது. இந்த சம்பவங்களால் 
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் மிகக் கவலை அடைந்தனர்.
விடுதலைப்புலிகளின் தலைமையால் புலி உறுப்பினர்களுக்கு எந்தக்காரணம் 
கொண்டும் மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யக்கூடாது ,மீறினால் கடும் 
தண்டனை விதிக்கப்படும் என்று சுற்றறிக்கை வெளிவந்தது.சிலநாட்களுக்குப்பின்னும் மீள துப்பாக்கி பிரயோகம் நடந்ததும்
நடத்தியவர் இராணுவ பிரதேசத்திற்குள் ஓடி தப்பியதும் உண்மை.ஆனால் 
இவை அங்கொன்றும், இங்கொன்றுமாய்த்தான் நடந்தது. ஆனால் 
சிங்கள இராணுவத்தால் தினமும் ஆயிரத்திற்கு மேல் மக்கள் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
                                              விடுதலைப்புலிகளில் இணைக்கப்பட்ட சிலரும் 
இணைக்கப்பட வேண்டிய சிலரும் பாதிரியார் ஒருவரின் ஒத்தாசையுடன் 
தேவாலயத்தினுள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.இந்நடவடிக்கையானது 
அச் சூழலுக்கு பொருத்தமற்றது,தவறானது.புலிகளும் மக்களுமாய் 
அவர்களை ஆட்சேர்ப்பில் பலவந்தமாய் இணைத்தனர்.ஒவ்வொருவருக்கும்   
வெவ்வேறு நீதி அங்கு இல்லை 
                                             காயமடைந்த மக்களுக்கு உடனடி முதலுதவி
வழங்குவதிலிருந்து சத்திரசிகிச்சை செய்வதுவரை விடுதலைப்புலிகளின்
மருத்துவப்பிரிவே முக்கிய பணியாற்றிற்று. சிறிலங்கா அரசால்
தடை செய்யப்பட்ட முக்கிய மருந்துகளையும்,இரத்தப்பைகளையும்
விடுதலைப்புலிகளே வழங்கி மக்களின் உயிர் காத்தனர்.எந்த தொற்று
நோயும் வராமல் இறுதிவரை தமீழீழ சுகாதார சேவையினர்
உழைத்தனர்.
                                     வைகாசி பதினைந்தாம் திகதிவரை மக்களுக்கு
கஞ்சி ஊற்றினர். ஒருநேர/ இரு நேர கஞ்சியுடனேயே விடுதலைப்புலிகள்
தமது கடமையை செய்தனர்.
                                      மக்களின் நலன் கருதி
இறுதி சுற்றுச்சண்டை தவிர்க்கப்பட்டது.    தலைமையால் உறுப்பினர்கள் சுயமுடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.பலர் போரிட்டு மடிந்தனர்.சில
பாரிய காயமடைந்த போராளிகள் தற்கொலை செய்தனர்.பலர்
இராணுவ வலயத்திற்குள் வந்து சரணடைந்தனர்/ பிடிபட்டனர்.சிலர்
தப்பிச்சென்றனர்.
                                   வைகாசி பதினாறுவரை விடுதலைப்புலிகளின்
நிர்வாகம் சீராக கட்டமைப்புடந்தான் இயங்கிற்று. 




Share/Save/Bookmark

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஆயிரம் கைகள் மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை. அது போன்றே உண்மைகளும். எம் போராளிகளை இயக்கத்தையும் அசிங்கப்படுத்துவதற்கு நடந்த சதி. எம் ஒவ்வோரு தமிழீழ தமிழனுக்கும் தெரியும் புலிகள் ஒருபோதும் தம் பின்னால் வந்த மக்களை கேடயமாகவோ அல்லது சுடவோ இல்லை என்பது. உலகம் கண்ணை மூடிக் கொள்ள சிங்கள கொலைவெறியருக்கு துணைபோன சில துரோகிகளின் கட்டுக்கதைகள் பலம் பெற்றது அச் சந்தர்ப்பத்தில்.

கருத்துரையிடுக

Bookmark and Share