செவ்வாய், 24 நவம்பர், 2026
சகோ! எல்லாம் ஒரு நிகழ்தகவுதான்
சகோ!
மணிக்கணக்கில்
இல்லை இல்லை
நாள்கணக்கில்
கதைத்திருக்கிறோம்
சிரித்திருக்கிறோம்
ஒன்றாக உழைத்திருக்கிறோம்
வெடித்து சிதறும் செல்மழைக்குள்ளும்
உரசிப்போகும் ரவைகளுக்குள்ளும்
வாழ்ந்திருக்கிறோம்
ஆனாலும்
யார் முந்துவோம்
அறிந்திருக்கவேயில்லை
எல்லாம்
ஒரு நிகழ்தகவுதான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக