சனி, 6 ஜூலை, 2024

திரும்பிப்பார்க்கிறேன்

சாவகச்சேரி மருத்துவமனை பேசுபொருளாகிறது , மனது வலிக்கிறது. 1995 ஆம் ஆண்டு யாழ் வலிகாம பெரும் இடப்பெயர்வில் யாழ் மருத்துவமனை மந்திகை மருத்துவமனைக்கு இடம்மாற நானும் ஒரு சில மருத்துவர்களும் நூற்றுக்கணக்கான காயப்பட்ட நோயாளிகளுடன் சாவகச்சேரி மருத்துவமனைக்கு ஒரு இரவில் வந்து சேர்ந்தோம். நான் சத்திரசிகிச்சைப்பிரிவை பொறுப்பெடுத்து நடத்தினேன். சாவகச்சேரியே மக்களால் நிரம்பிவழிந்து அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த காலம். நானும் எனக்குரிய அணியினரும் 24 மணிநேரமும் மருத்துவமனையிலேயே இருந்தோம்.மருத்துவமனையின் மற்றைய விடுதிகளில் பகல் நேரங்களில் மருத்துவர்கள் இருப்பார்கள், இரவுநேரங்களில் அத்தியாவசிய நோயாளிகளுக்கு நாங்களே உடன் சிகிச்சை வழங்கினோம் , இயன்றவரை சிறப்பான மக்கள் சேவை வழங்கினோம் .


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share