திங்கள், 23 டிசம்பர், 2024
கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு
அருகில் ஒரு சிறு கட்டற்ற கிணறு
50 குடும்பங்கள் நேற்று இங்கு இருந்திருக்கும்
அழைப்பிற்காய் காத்திருக்கிறேன்
சுதர்சன்
ஆள் அரவத்திற்கு காது கொடுக்கிறான்
வீரனொருவன்
குழந்தையை கொஞ்சி மனைவியிடம் கொடுத்தனுப்பிவிட்டு
தோள் சுமக்க திரும்புகிறான்
வீரனின் இதயத்தின் ஈரம் கண்களில் தெரிகிறது
சுதர்சனின் கண்களிலும் கண்ணீர் நிரம்புகிறது
எங்களிடம்
field compressor வாங்கிப்போகிறா ஜனனி அக்கா
சன்னங்களின் பாடலுக்கு குறைவில்லை
பயம் இல்லை பசியிருக்கிறது
கழுத்தில் தொங்குகிறது இறுதி உணவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக