கடிதத்தை எழுதிவிட்டேன்
எங்கு சேர்ப்பது?
உன்னையும் என்னையும் ஒருகோடுதான் பிரித்தது
கோடு கடலாகி மலையாயிற்று
பெருநினைவுகளில் மனதினுள் சுனாமி எழுகிறது
பாறையாகிக்கொண்டே இறுகுகிறது இதயம்
கனவுகளில் பசுமையுமில்லை அனலுமில்லை
ஒளியுமில்லை இருளுமில்லை
உப்புசப்பில்லா வாழ்வின் கனவில்
வேறு என்ன தெரியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக