வெள்ளி, 20 டிசம்பர், 2024
திரும்பிப்பார்க்கிறேன்
எமது வன்னிப்பிரதேசத்தில் யுத்தகாலத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவசுகாதார பணியும் மக்களுக்கு உதவிகரமாக இருந்தது. குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் இயங்கிய நடமாடும் மருத்துவசேவை , சுகாதார நிலையங்கள் இடர் தீர்க்க உதவின.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கீழ் பணிபுரிந்த community health worker (CHW ) ற்குரிய சேவைக்கால பயிற்சிகளை நானும் மருத்துவர் ஜெயகுலராஜா ஐயாவும் மூத்த பொது சுகாதார பரிசோதகர் குணரட்ணம் ஐயாவும் வழங்கி அவர்களுக்கான தர உயர்வு வாய்மொழி பரீட்சையை (1999 ஆம் ஆண்டு ) ஆணைவிழுந்தானில் இயங்கிய தொழில்நுட்ப கல்லூரியில் நடத்தினோம்.
சமாதான காலத்தில் community health worker களுக்கு ஒரு சிறப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் அவர்களுக்குரிய பயிற்சிகளை வழங்கி அதில் சித்தியடைந்தவர்களுக்கு community health promoter என்ற உயர்வு வழங்கப்பட்டது. இதில் நண்பன் சிவமனோகரனின் பங்களிப்பை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
என்னைப்பொறுத்தவரையில் எவ்வளவு மருத்துவ சுகாதார அறிவுள்ளவர்களை எங்கெங்கு உருவாக்க முடியுமோ அதை செய்வதே எனது நோக்காக இருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக