அவள் எடுத்தாளே அழைப்பு என்பதே விதி
இன்றும் அப்படித்தான் அவளே எடுத்தாள்
"எப்படியண்ணா புத்தாண்டு?"
நான் கேட்கத் தயங்கியதை
அவளே கேட்டுவிட்டாள்.
இண்டைக்கு ஒருநாள் ஒரே வெடிச்சத்தங்கள் தான்
அண்ணார்ந்து பார்க்கவே அழகாய் உள்ளது வானம் என்றேன் நான்
ஒவ்வொரு நாளும் வெடிச்சத்தங்கள்தான் எங்களுக்கு வாழ்க்கை.
அண்ணார்ந்து பார்க்கவே "மிக்", வருவது போன்று பயமாக
இருக்கிறது அண்ணா என்றாள் அவள்.
கந்தகம்,
சிறுவர்களுக்கு அழகிய வானவேடிக்கை காட்டுவதற்காய் - இங்கே
என் தங்கைகளின் உயிர்களைப் பறிப்பதற்காய் புத்தனின் சீடர்கள்
கையிலே - அங்கே!
"என்ன சாப்பாடு?" நான் கேட்டகத் தயங்கும் இன்னொரு கேள்வியையும்
அவளே கேட்டுவைத்தாள்
மைக்டொனால்ஸில் கம்பேர்க்கர் என்றேன் நான்.
காலையில் கஞ்சிதான்
அப்பா வந்தாத்தான் மதியம் தெரியும் என்றாள் அவள்.
ஏன் காசு எல்லாம் முடிஞசுபோச்சோ என்றேன் நான்.
காசு இருக்குக் கையில்இ ஆனால் கடையிலதான் சாமான்கள் இல்லை
என்றாள் அவள்.
பல புண்ணியங்கள் உலகிற்குச் சொல்லிச் சென்றான் புத்தன் அன்று,
ஆனால் இன்றோ அவன் சீடர்கள் தம் நாட்டிலே என் தங்கைகளைப்
பட்டினி போடுகிறார்கள்.
அண்ணா மேலாலே வருகுது, பிறகு எடுக்கிறேன் என்ற நடுங்கிய
குரலுடன் துண்டிக்கப்பட்டது தொடர்பு.
ஓ புத்தனே! என் தங்கைக்கு அடுத்த புத்தாண்டாவது சந்தோஷமாய்
இருக்காதா?
ஐயோ வேண்டாம்! அடுத்த முறை அவள் குரலை நான் கேட்பதற்றகாயினும்
உயிரோடு விட்டுவைப்பார்களா அவளை உன் சீடர்கள்??
-கதிரவன்-
( போன வருட பிறப்பின் போது எழுதப்பட்டது)

1 கருத்து:
நல்ல ஒரு கவிதை. உங்கள் வலி புரிகிறது.......
என்ன பண்ணுறது நாம் இப்பிடி தமிழர்களாக பிறந்திட்டம்
கருத்துரையிடுக