வெள்ளி, 19 மார்ச், 2010

பிரியசகி

பிரிவு 
கிழக்கு  மேற்காகிறது.
மனதுகள்  மட்டும் 
ஒருபுள்ளியாய்,
பூமியாய்  சுழல்கிறது.

மனதை  எழுதி, மடித்து 
கடிதமாய்  அனுப்ப 
முகவரிகள்  ஏது?

மண் நினைவில் 
நான் புற்று நோயாளி.
உன் நினைவில்
நான்  பேராசிரியன். 

நாம்  சந்தித்த, வாழ்ந்த மண்.
இன்று
இராணுவ சகதியாய்ப்  போயிற்று.
நாம் வாழ்ந்த அடையாளங்கள் 
ஏதாவது  அங்கு  இருக்குமா

குழந்தைகளோடு 
எங்கோ நீ  மல்லுக்கட்டுவாய்.
குழந்தைகளின் குறும்புகளால் 
நீ கவிதையாய் ஆவாய்.

உனது  நாட்கள்
கனதியானவை.
எனது  நாட்கள்
வெறுமையானவை.

மக்கள்  புகைவண்டி  ஓடுகையில் 
பாரம் ஏற்றும்  புகைவண்டி
உன் நிலையம்  நிற்க 
நீயும்  தொற்றிக்  கொண்டாய்.

மௌனத்திற்கு  மொழி  பெயர்ப்பு 
எந்த மொழியிலும் தேவைப் படுவதில்லை.
எனவே  என்வாழ்வை   நீ  புரிந்திருப்பாய் .
ஆதரவு  இல்லாமல் வாழ 
பழகிக் கொண்டாய்.
புயலுக்குள்  கப்பலோட்ட கற்றுக்கொண்டாய்.
  
அலை  அடிக்கும் காலம் 
நாம் பிறந்தோம்.
யார் மீது குற்றம்?
சுனாமிக்குள் சிக்குண்டு போனோம்.
வாழ்க்கைப்  படகு 
கரை சேருமா? என 
நீ நினைப்பாய்.
கடலுக்கு என்ன நடந்தது என 
நான் புலம்புவேன்.

முட்களுக்குள் 
அழகு ரோஜா இருப்பது போல் 
துன்பங்களுக்குள் 
அழகு வாழ்வை  நாம் சமைத்தோம்.
ரோஜா உதிரும் என அறியாமல்.  

மீண்டும் 
ரோஜா  பூக்குமாஆம். 


Share/Save/Bookmark

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்

Eelam சொன்னது…

வார்த்தைப் பிரயோகம் நல்லா இருக்கு.......... வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

Bookmark and Share