வெள்ளி, 29 மார்ச், 2024
முள்ளிவாய்க்கால் இறுதிநாள்
இளைய போராளிதான் நீ
அரச கட்டுப்பாட்டுக்குள்
யாவும் அடங்கிக்கொண்டிருந்தது
கைக்குழந்தையை
இருகைகளால் தூக்கி முத்தமிட்டு
மனைவியுடன் அனுப்பிவிட்டு
போகும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாய்
அவர்கள் போய்முடியும்வரை
தோளில் இருந்த துப்பாக்கியை
கைகளில் மாற்றியபடி
ஏதும் கதைக்காமல் வந்துகொண்டிருந்தாய்
ரொட்டியொன்றை மூவர் பகிர்ந்துண்டோம்
பிரிந்து நீ போனாய்
சிறிது தூரம் போய் என்னை அழைத்தாய்
நான் உனைப்பார்க்க
நீ கையசைத்துவிட்டு போனாய்
பரிமாற வார்த்தைகள் இருக்கவில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக