வெள்ளி, 29 மார்ச், 2024
ஒளியும் இருளும் குழைந்திருந்த
மாலைப்பொழுதில்
பறவைகளின் வரிசை
குலையாதிருந்தது
குருதி உண்ணும் நுளம்புகளை போல
மண் அள்ளி டிப்பர்கள் விரைந்தன
மின்மினி வெளிச்சத்தில்
சட்டென உயிர்கள் பிரிந்தன
முடிந்த நாட்களைப்போல
போன உயிர்களும் மீளவருவதில்லை
உயிர்த்தானம் கொடுக்க
வரிசைகுலையா அவதானம் தேவை
குழந்தையொன்று
பொத்து பொத்தென நடந்து வரும்
சத்தம் போல் இதயம் அடித்துக்கொள்கிறது
புதிய எதிர்பார்ப்புகளோடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக