சனி, 27 மார்ச், 2010

காந்தியின் கண்ணீர்

நண்பா உன் சிலையையா
உடைக்கிறார்கள்?

நல்லூரில்
நல்கந்தன் முன்
நலிந்த இனத்தின்
நலன் வேண்டி
நீர் கூட அருந்தாமல்
ஈரேழு நாட்கள்
நீ  எரிந்து
ஒப்பற்ற தியாகமானாய்.

உன்னைக் கொன்று
காந்திதேசம்
காந்தியைக் கொன்றது.

உலக தமிழர் மனங்களில்
நீ வாழ
உன் சிலையை உடைத்தார்
மீண்டும் மஞ்சள் துண்டுக்காய்
கழுத்தறுத்து
தாயைக் கொன்றார்.

பல்கலைப் படிப்பை
மக்களுக்காய்
துறந்தவன் நீ -மீண்டும்
அவர்களுக்காய்
பல்கலை போனாய்
இறந்த உடலாய்.

பாரத பணிமனை
யாழில் திறப்பு
ஈழத்து காந்தியின்
சிலை தகர்ப்பு.

நீதியிலும் ராஜதந்திரமா?
வாழ்வு கூனிக் குறுகிப் போகுமா?

சொந்த மண்ணில்,
மக்களுக்காகவே வாழ்ந்து,
அணுஅணுவாய் இறந்த மண்ணில்
உன் சிலையைக் காப்பாற்ற முடியவில்லை.

மக்கள் புரட்சி வெடிக்கும்
பாரில் எம்தேசம் பிறக்கும்
கனவோடு நீ போனாய்.


Share/Save/Bookmark

2 கருத்துகள்:

viduthalai சொன்னது…

வாழ்த்துக்க‌ள்

myworld சொன்னது…

எழுத்தும் கருவும் வழியையும் உரத்தையும் நுட்பமாய்க் கொண்டு வந்திருக்கின்றன.

கருத்துரையிடுக

Bookmark and Share