திங்கள், 26 ஏப்ரல், 2010

காதல் -சிறு குறிப்பு

பூவைப் போல
காதல் இல்லை
பூ உதிர்ந்து விடும்
வேரைப்போல
காதல் வேண்டும் .
மழைக்காலத்தில் வரும்
சூரிய ஒளியைப்போல
காதல் தேவைப்படுகிறது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
விலங்குகளுக்கும் தான்.



காதல் நிலா அல்ல
வந்து வந்து போவதற்கு
காதல் சூரியனும் அல்ல
இரவில் காணாமல் போவதற்கு
காதல்
எப்போதும் கூட இருக்கும் காற்று
ஆச்சரிய மொழி
அதிசயக் கடிதம்
ஒருவரை ஒருவர்
இதயத்தினுள் பூட்டி
தொலைக்கப்படும் திறப்பு.

வானம் நிறையக் கனவுகளும் ,
எதிர்பார்ப்புகளும் நிறை  உலகில்
காதல்
வெறும் மகிழ்பாதை மட்டுமல்ல
கடுங்குளிர்,கொதிநீருக்குள்ளும்
இருவர் ஒருவராய் சேர்ந்தே செல்லும்
இறுதிவரை உறுதியாய்--
 காதல் சாதலிலும் முடிவதில்லை.

காதலுக்கு தேவதைகளோ
ராஜகுமாரர்களோ தேவை இல்லை.
வாழ்வோ குறுகியது
காதலுக்கு எந்த எல்லையுமில்லை.
பசிக்கும் போதே உணவை நாடுவர்
காதலோ திடு திப்பென வரும்.

காதல்
வெறும் உணர்வின் பாசை அல்ல
உயிர்களின் சங்கமம்.

முழு இதயத்தையும் ,சக்தியையும் தந்து
வாழ்வின் பாதியை
காதலில் தேடுகிறார்கள் மானிடர்கள் .
ஒரே அலைவரிசையில்
மனமுவந்து வாழும் காதல்
குளிரும் இசையாய்,சங்கீதமாய்--
ஒ காதல் வந்த பாதையும் அழகானது
நாளையும்தான்

இறந்த உடலோடு வாழ்பவரும் உண்டு
அது காதல் அல்ல
மனநோய்
அதீத காதலாலும் வந்திருக்கலாம்

நாகரீகம்
காதலை தொலைத்து
கவிதையை இழக்குமா?


Share/Save/Bookmark

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

!!!Where there is love there is paradise, Where there is no love there is hell!!!

கருத்துரையிடுக

Bookmark and Share