அவன் ஒரு போராளி மருத்துவன்.பல ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்தவன்.
வெற்றி பெற்ற சத்திரசிகிச்சையாளன்.வேகம் கூடிய சத்திரசிகிச்சையாளன் .
அவனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன .மகப்பேறு சத்திரசிகிச்சை
உள்ளீடாய் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் செய்தான்.
நாலாம் கட்ட ஈழப்போரில் கண்ணாடியுடன் சத்திர
சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஆரம்பித்தது.கண்ணாடியுடன்
செய்வது முன் வெறும் கண்ணோடு செய்ததைப்போல் சௌகரியமாக
இருக்கவில்லை.என்றாலும் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக சென்றன.
இராணுவம் மாத்தளனை கைப்பற்றியபின் அவர்களின்
ஒரு சத்திரசிகிச்சை கூடம் வலைஞர்மடத்தில் இயங்கிற்று.இரவு சத்திரசிகிச்சைகள் முடித்து பாயில் படுத்தான்.வழமையாக படுக்கும் போது
கண்ணாடியை தலைக்கருகில் வைத்தே படுப்பது வழமை.காயம் வந்தால்
உடன் செல்லக்கூடியதாய் இருக்குமாகையால்.அன்று இரவு இரண்டு மணிக்கு
படுத்தனர் .மூன்றரைக்கு எழுப்பினார்கள் .எழும்பும் போது இருட்டில் அவனது
கால் உலக்கியே கண்ணாடி உடைந்து பாதத்தில் இரத்தம் எடுத்தது.கண்ணாடி
ஒன்றை அவன் விருப்பத்திற்கு உரிய சகா,மாவீரன் இசை ஒழுங்குசெய்து
தந்தான்.அந்நேரங்களில் கண் பரிசோதிக்கவோ, கண்ணாடி எடுக்கும்
வசதியோ அங்கில்லை . அக்கண்ணாடி ஐம்பது வீதம்தான் பொருந்திற்று.
இறுதிவரை அங்கு உரிய கண்ணாடியில்லாமல் மிகக்கடினப்பட்டு சத்திர சிகிச்சை செய்தான்.
அவன்தான் விடுதலைப்புலிகள் மருத்துவப்பிரிவில்
கண் பரிசோதித்து கண்ணாடி பெறும் பிரிவை ஆரம்பித்தவன்.1996 இல் இருந்து
2003 வரை கிளி பொது மருத்துவமனையில் கண் கிளினிக்கையும் நடாத்தினான்.அவன் ஆரம்பித்த பிரிவால்
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பல ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
ஆனி 2009 இற்கு பின் இன்றுவரை பல இடங்களில் பரிசோதித்தும்,பரிசோதிக்காமலும், எட்டு
தடவை கண்ணாடி எடுத்தாயிற்று. ஒரு கண்ணாடியிலும் திருப்தி இல்லை.
அதீத பாவனையால் கண் பாதித்தது என்கிறார்கள்.
கண் பார்வை குறைபாட்டால் அவன் வாழ்வு கடினமாக இருக்கிறது.
சிறு வயதில் மாபிள் விளையாட்டில் கதாநாயகனாய்
இருந்தான்.அவன் அடித்து வெல்லும் மாபிள்களை தம்பிமார் சாரக்கட்டில்
கொண்டுவருவார்கள் . வெல்லும் மாபிள்களில் அரைவாசியை அவர்
அவருக்கே திருப்பிக்கொடுப்பான். தோற்பவர்களுக்காகவும் விளையாடிக்கொடுப்பான்.அப்படி இருந்தும் ஆயிரத்து எண்ணூறு
மாபிள்களை தங்கள் கிணற்றினுள் போட்டார்கள். பின் துப்பாக்கி
சுடுவது,அம்பு எய்வதிலும் மற்றயவர்களுக்கு சளைத்தவன் அல்ல.
-நிரோன்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக