மனித உயிர்கள் உன்னதமானவை.மனித அன்பு நிலைக்கவேண்டியது.
போர் கொடூரமானது.மனிதன் அமைதியாகவும்,மனச்சாட்சி வழி
நடந்து அன்பில் அமிழ்தலே நல்லவாழ்வு. இவற்றுடன் சுதந்திரம் பெற்றவாழ்வே நிறைவாழ்வு.
ஒரு இனத்தின் உரிமை,நிலம் பறிக்கப்பட்டு,இன அடையாளம் ,
உயிர்கள் இழக்கப்படும்போது அந்த இனம் மீது போர் திணிக்கப்படுகிறது.
இனத்தின் வாழ்வுரிமையை காக்க போராளிகள் உருவாகிறார்கள்.அநேகர்
மனச்சாட்சியை மீறமுடியாமல் போராளியாகிறார்கள்.
போரின் முடிவில் ஒரு இனத்தின் அதிக நல்லவர்களை இழந்து போகிறோம்.அங்கவீனம் அடைந்த போராளிகளின் எஞ்சிய வாழ்வும்
போராட்டமாகிறது.
போராளிக்குடும்பங்கள் வசதி அற்றவராகவும்,கல்வியில் தாழ் நிலையிலும்
விடப்படுகிறார்கள்.
போராளிகள் தாம் கொண்ட இலச்சியத்திட்காய் செய்யும்
தியாகங்களை எப்படி எழுதி முடிப்பது? அன்பு நிறை உள்ளங்களை
கண்முன்னால் இழக்கும் அவலம் அதிகம் போருடன் கலந்தது.
போர் உச்சகாலங்களில் பலமுள்ள எல்லோரும்
ஏதாவது நேரடி/மறைமுக உதவியை போராளிகளுக்கு/மக்களுக்கு செய்யவேண்டும்.தாங்கள்
ஒளித்துக்கொள்வது / தப்பமுனைவது அழகல்ல. போராட்டத்தை
விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் தகுதியானவரா என தராசில்
நிறுத்துப்பார்க்க வேண்டும்.
ஒருவனை பத்து பேர் சேர்ந்து அடித்ததை பெரு வீரமாய் ,
இல்லாத ஒருவனை மேலும் விமர்சித்து எழுதுகிறார் கையாலாகாதவர்.
வீரமும் தியாகமும் ஈழத்தில் விளைந்தது என்றால் அது மிகையாகாது.
அதை விளைப்பித்தான் ஒரு சுத்த வீரன்.
உண்மைகள் மறைக்கப்படுவது கொடுமையானது.ஆனால்
அதுதான் நடக்கிறது.
எம் இனத்தை விடுதலை பெற வைப்பதற்காய் விரும்பியோ விரும்பாமலோ எல்லா முயற்சியும் எடுக்கப்பட்டது. தவறுகள் இருக்கலாம் ஆனால் அது
இன்று உண்மைக்கு மாறாக மிக பெரிதாக எம் இனத்தவரால் கூட காட்டப்படுவது மிகக் கவலை தருகிறது.
அன்று திலீபன் சொன்னான் " நாம் எல்லா போராளிகளும்
இறந்தால் தமீழீழம் தருவார்கள் எனில் இந்த கணமே அனைவரும்
இறக்க தயாராய் இருக்கிறோம்.இது முள்ளிவாய்க்கால் காலத்திலும்
கடமையில் இருந்த அனைத்து போராளிகளின் மனநிலையிலும்
இருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக