சனி, 17 மார்ச், 2012

பசில் ஐயா சொல்கிறார் மேற்குலகத்திட்க்கு தேவை என்றால் கடன்குடுக்கலாமாம்.பசில் ஐயா சொல்கிறார்
மேற்குலகத்திட்க்கு தேவை என்றால்
கடன்குடுக்கலாமாம்.
எப்பிடி ஐயா
வாங்கின கடனில
ஒருதுளியும் திருப்பிக்கொடுக்கவில்லை
இதுக்குள்ள எப்படி ஐயா
போன கிழமைதான்
மண்ணெண்ணெய்,கின்ணெண்ணை எல்லாம்
விலை ஏறிச்சு
எல்லாத்திலேயும் பத்து வீதம்
நீங்கள் வாங்குறதால
உங்களை
mr 10 percent எண்டெல்லோ கூப்பிடீனம்
அதுல ஏதாவது குடுக்க கிடக்கே?
பிள்ளை
நாங்கள் ஒன்றும் யோசிச்சு கதைக்கிறதில்லை
இப்படி கதைச்சனியோ என்றால்
இல்லை என்றுதான் சொல்லுவோம்
எப்பிடி மூளை ?
பசில் ஐயா
இப்ப கணணி உலகம்
எல்லாத்தையும் சாட்சியாய் வைச்சிருப்பாங்கள்
நான் எத்தனை தடவை பிடிபட்டுட்டன்.
போடா பிள்ளை
தம்பியின்ற வெள்ளை வான் தெரியுமே ?
எரிவாயு வான் தெரியுமே?
உலகம் விரியல்ல சுருங்கிற்றுது பிள்ளை.
கீ கீ கீ 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக