தமிழீழ சுகாதாரசேவையின் திலீபன் நடமாடும் மருத்துவசேவையின் பொறுப்பதிகாரி Dr தேவா அக்கா அவர்கள் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தன் இனத்தின் விடுதலைக்காகவும் மக்கள் பணிக்காகவும் ஒப்புவித்தவர். திலீபன் நடமாடும் மருத்துவசேவையின் ஊடாக மருத்துவ வசதி குறைந்த இடங்களுக்கும், வன்னியில் இயங்கிய சிறுவர், முதியோர், மனநிலை பாதிப்பு, அங்கவீனமடைந்தோர் இல்லங்களுக்கும் மருத்துவசேவையை கிரமமாக கொண்டுசென்றவர். இருதடவைகள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியவர். இறுதிப்போரில் தான்தங்கியிருக்கும் இடங்களை மருத்துவநிலையமாக்கி மக்களுக்கான மருத்துவப்பணியாற்றியவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக