குழந்தைகளுடன்
நட்பாகும் மருத்துவன்
வாழ்நாள் பேறுபோல
குழந்தை வளர வளர
நட்பின் வயதும் வளரும்
குழந்தை பெரியவராக
அவரது உலகம் வானத்தில் விரிந்திக்கும்
நட்சத்திரங்களாய்
குழந்தையும் மருத்துவனை மறப்பதில்லை
மருத்துவனும் குழந்தையை மறப்பதேயில்லை
நீண்ட இடைவெளியில் திடுதிப்பென சந்திக்கையில்
குழந்தையே மருத்துவனாகிறான்
மருத்துவனே குழந்தை போல்
ஒரு நோயாளியாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக