வியாழன், 15 பிப்ரவரி, 2024
நீண்ட கனவுக்குப்பின்னால்
எங்களுக்கென்று எதுவுமிருந்ததில்லை
பெருங்கனவு கனவானதும்
இழப்புகளின் ஊமைக்காயம்
இதயத்தினுள் வளர்ந்து கொண்டிருக்கிறது
உப்புக்குருதியில் வளரும் காயத்திற்கு
மருந்தில்லை முடிவுமில்லை
பனிமூடும் இரவுகளில் தனித்திருக்கிறேன்
பனிப்படர்க்கையின் வெண்நிறம்
ஆவிகளின் உடைபோல சூழ்ந்திருக்கிறது
மூச்சு விடவும் ஆவிவருகிறது
யாவும் உறைந்திருக்க
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது
சொல்வழி கேளாதவன் போல
குருதிற்குள் வாழ்ந்த என்னிடம்
"குருதியின் நிறம் சிகப்பு" என
சொல்கிறான் ஒருவன்
ஓ! அப்படியா என நகர்கிறேன்
ஆச்சரியமாய் பார்க்கிறான்
இரக்கமற்றவன் என நினைக்கிறான்
பூசி மெழுகிய இரண்டாவது வாழ்க்கையில்
எதையும் நினைத்துவிட்டுப்போகட்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக