சனி, 3 பிப்ரவரி, 2024
இறுதி கையசைப்பின் நினைவ
பஞ்சனைக்குள் வாழ்ந்த நீ
நெருப்பாற்றுக்குள் போய் வந்தாய்
ஒவ்வொரு தடவையும் போய்
திகிலூட்டும் கதைகளோடு வந்தாய்
சிலதடவை விழுப்புண்ணோடும்
போனாய் வந்தாய்
கதைகளற்று
வானமே இடிந்து எம்மீது வீழ்ந்தது
இறுதி கையசைப்பின் நினைவு
அம்மாவிடம்
இன்னும் உயிரோடு இருக்கிறது
ஏதோ ஒரு செய்தியோடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக