சனி, 10 பிப்ரவரி, 2024
பறவை ஒன்று பறந்துபோகிறது
கூடவே அதன் நிழலும்
என்னை கடந்து போகிறது
செய்தியொன்றை தந்துவிட்டு
வானில் சிறகடித்துபோகிறது
இருள் வருகிறது வீடு போ !
நாடு இல்லாதவனுக்கு ஏது வீடு?
மஞ்சள்ஒளி அந்திவானை தந்துவிட்டு
கடல் மீது குந்தியிருக்கிறது சூரியன்
எச்சினமும் மறைகிறது அவ்வழகில்
இக்கணம் தொடராதோ?
சூரியனையும் விழுங்குகிறது கடல்
துயரில் அமிழ்ந்து கண்களை திறக்க
நிலாவொளி ஆறுதல் தருகிறது
அதில் அம்மாவின் முகம் தெரிகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக