வியாழன், 22 பிப்ரவரி, 2024
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன்
அலைகள் தாவி விழுந்து கொண்டிருந்ததன
எழுவானம் சிவந்து கொண்டிருந்தது
நீ கையசைத்துப்போனாய் - ஏதோ
சொல்லவந்தும் சொல்லாமல் போனாய்
நிமிர்நடைக்கும் புன்னகைக்கும் குறைவில்லை
இடைவெளி அகன்றுகொண்டிருந்தது
நீ மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
மாலைநேரம்
கடலோரம் நின்றுகொண்டிருந்தேன்
கடல் அலைகளற்று இருந்தது
"நீ வரமாட்டாய்" செய்தி மட்டும் வந்தது
அடிவானில் செவ்வானம் மறைந்தது
விக்கல் ஒன்று தொண்டைக்குழியில் சிக்கிற்று
உடலினுள் தீ ,உயிர் பிழிய நகர்ந்தேன்
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக