சனி, 31 மார்ச், 2012

அமைதி தேவைப்படும் நேரமெல்லாம் துயிலுமில்லம் போவோம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது.இராணுவ
கட்டுப்பாட்டு பிரதேசத்திக்குள் இருந்து வி.பு. பிரதேசத்திற்குள்
போனதும் உடம்பில புது இரத்தம்  ஊறும் .அந்த நாள் இனி வருமா?
மனம் ஏங்கிச் சாகிறது.தமிழரின்  நிர்வாகம் .வேகமானியுடன் காவல்துறை 
ஒளிச்சு நிக்கும் .பிடிபட்டால் fine தான் தப்ப ஏலாது.வன்னியிக்க 
எங்க போனாலும் மனசு நிறையும்.பாண்டியன் ஐஸ் கிரீம் வேறு எங்கயும் 
குடிக்கமுடியாது.சேரன் ரோல்ஸ் எழுதவே வாயூறுது . சேன்ட நாசிகூறி 
சொல்லி வேலையில்லை பிரைட் ரைஸ்,சூப் என்றால் இளம்தென்றல்தான் .
பாண்டியனில பத்து ரூபாயோட காலை சாப்பாடு சாப்பிடலாம் .இதற்குள்ள 
1/9 வேற .பைந்தமிழ் பாண் என்ன அருமை. எல்லாக் கடையும் அந்த மாதிரிதான்.எங்கும் சிறந்த  தொற்று நோய் கட்டுப்பாடு.
                                 கிளிநொச்சி சந்தைக்கு போனால் என்ன சந்தோசமாய் 
இருக்கும்.எல்லாருமே சொல்லுவினம் சந்தை என்றால் சந்தைதான்.
என்ன திட்டமிடல் . வசதி குறைந்த இடத்தில இருந்த சந்தோசத்திட்க்கு 
ஈடு இணையில்லை.களவு இல்லை எந்த பயமுமில்லை பிச்சைக்காரர் இல்லை .ஒரு கிலோ அரிசி ஒருக்காலும் நாற்பது ரூபா தாண்டினதில்லை.
                              கடற்கரையில நின்று மீன் வாங்கோணும் ,வயல்கரைகளில 
காலையில/மாலையில இருந்து கதைக்கோணும்,குளக்கரையில கொக்குகளை நத்தைகொத்திகளை கலைத்து விளையாடோணும்.காலை விடிந்ததென்று கோழி கூவோணும் ,
காகங்கள் கரையோணும் , குமுளமுனைக்கு  போய் லாப்பழம் சாப்பிட  வேணும். நெடுங்கேணியில  போய்  பச்சைஅரிசி சோறும் பன்றியும் 
தயிரும் சாப்பிடவேணும் .பூனகரிக்குப்  போய் கூழ் காய்ச்சிக் குடிக்க வேணும் .   வன்னியில காட்டிறைச்சி , தேன், பழங்கள் எந்த குறையுமே 
இல்லை.சுயநலமற்ற மக்களை சந்திக்க வேணுமா? அதற்கு நிறைய 
போராளிகள் உண்டு . காதுக்குள்ள கோயில் மணியோசை கேட்டுக்கொண்டே 
இருக்கும்.குரங்குகள் குட்டியோட மரம் தாவும்,எருமைகள் நீருக்குள்ள மூழ்கி எழும்,மாடுகள் பட்டியாய் மேயும்,கன்றுகள் துள்ளி விளையாடும். மண்ணின் வாசமும் நீர்க் குளியலும் ஆகா சுகம்தான்.
                                                                    அமைதி தேவைப்படும் நேரமெல்லாம் துயிலுமில்லம் போவோம்.யாருக்கும் தெரியாத மனதொன்று நேர்த்தியாய் அங்கு கதை பேசும், மீண்டும் வருவோம் சொல்லி நாம் புறப்படுவோம்.
                                             நகமும் சதையுமான வாழ்வு தாமரை இலையில் நீர் போலாயிற்று.


Share/Save/Bookmark

3 கருத்துகள்:

Amudhavan சொன்னது…

அருமையான முழுமையான கவிதை. அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று ஏங்க வைக்கிறது.

பெயரில்லா சொன்னது…

நாசமாய் போவோர்கள் அந்த துயிலுமி்ல்லங்களையும அல்லவா அழித்து விட்டார்கள். மறுபடியும் அந்த வசந்தம் வரும். அது வரை பொறுத்திருப்போம் விழத்திருப்போம்.எம்மால் ஆன பங்களிப்பை செலுத்திவிடுவோம்.

கல்லறைப்பூக்கள் சொன்னது…

தமிழீழமே மாவீரர்கள் துயிலும்,இல்லம்; கனவை நனவாக்குவோம்

கருத்துரையிடுக

Bookmark and Share