புதன், 1 மே, 2024
முற்றத்தில்
சிறுகுருவிகளின் குலாம்
ஒரே அளவில்
ஒன்றையொன்று ஒத்திருந்தன
என் சிறியமகள் விளையாடிக்கொண்டிருந்தாள்
அப்பா!
எனக்கு ஒரு குருவி வேண்டும்
அவவின் அம்மாவிடம் கேட்போமா?
தலையாட்டினேன்
என் கைபிடித்து தத்தித்தத்தி நடந்துவந்தாள்
இடைநடுவில் நின்றாள்
களைத்துவிட்டீங்களோ?
இல்லை
அப்பா!
அம்மாக்குருவி
என்னை தன்னிடம் தருமாறு
உங்களிடம் கேட்குமா?
என் விடையறியாமலே
திரும்புவோம் என்றாள்
தூக்கச்சொன்னாள்
என் கழுத்தை கட்டிக்கொண்டாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக